”தானியங்கி சோப் நுரை அளிக்கும் இயந்திரம்” – சியோமி அறிமுகம்!

 

”தானியங்கி சோப் நுரை அளிக்கும் இயந்திரம்” – சியோமி அறிமுகம்!

தானியங்கி முறையில் சோப் நுரை அளிக்கும் இயந்திரத்தை சியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக பலரும் அடிக்கடி தங்கள் கைகளை சோப் போட்டு கழுவுகின்றனர். அதே சமயம் பொது இடங்களில் மற்றவர்கள் பயன்படுத்திய சோப்பை பயன்படுத்த பலரும் தயக்கம் காட்டுவதால், ஹேண்ட் வாஷ் எனப்படும் சோப் லிக்விட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் இத்தகைய சோப் நுரையை தானியங்கி முறையில் அளிக்கும் இயந்திரத்தை சியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

”தானியங்கி சோப் நுரை அளிக்கும் இயந்திரம்” – சியோமி அறிமுகம்!

”எம்ஐ ஆட்டோமேட்டிக் சோப் டிஸ்பென்சர்” என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த இயந்திரம் இன்பிராரெட் சென்சாரில் இயங்குகிறது. இதனால் அதன் முன்பு கைகளை காட்டினாலே அது சென்சார் மூலமாக கிரகித்துக்கொண்டு சோப் நுரையை அளிக்கும் என தெரிகிறது. இதற்காக அதிக சப்தம் இல்லாத ஒரு சிறிய மோட்டார் அந்த இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் விலை 999 ரூபாய் ஆகும். எம்ஐ ஸ்டோர் மற்றும் அந்நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோரிலும் இந்த இயந்திரம் விற்பனைக்கு கிடைக்கிறது.

ஏற்கனவே செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதன பொருட்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள சியோமி நிறுவனம். தற்போது, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆட்டோமேட்டிக் சோப் டிஸ்பென்சர் மூலமாக நூதன நுகர்வோர் சாதனங்கள் விற்பனையில் தனக்கென தனி இடத்தை பிடிக்க திட்டமிட்டுள்ளது. இந்த வரிசையில் மேலும் பல பொருட்களை சியோமி விரைவில் அறிமுகப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

”தானியங்கி சோப் நுரை அளிக்கும் இயந்திரம்” – சியோமி அறிமுகம்!
  • எஸ். முத்துக்குமார்