விமான நிலையங்களில் இருந்து ஆட்டோ, ரிக்‌ஷாக்களை இயக்க அரசு அனுமதி!

 

விமான நிலையங்களில் இருந்து ஆட்டோ, ரிக்‌ஷாக்களை இயக்க அரசு அனுமதி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையிலும் நான்காம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. கொரோனாவால் பொது போக்குவரத்து சேவை முடக்கப்பட்டிருந்த நிலையில், பாதிப்பு குறைவாக இருக்கும் பகுதிகளில் குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதே போல போக்குவரத்துக்கும், ஆட்டோ டாக்ஸி இயக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் கொரோனாவால் சென்னையில் மட்டும் ஆட்டோ மற்றும் கால் டாக்ஸிக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது.

விமான நிலையங்களில் இருந்து ஆட்டோ, ரிக்‌ஷாக்களை இயக்க அரசு அனுமதி!

வெளிமாநிலங்களில் இருந்து தாயகம் திரும்புபவர்களுக்கு ஏதுவாக விமான சேவை மற்றும் சிறப்பு ரயில் சேவைகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ள இந்த நிலையில், பல மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறன்றனர். சென்னையில் ஆட்டோ, டாக்ஸிகளுக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்த இந்த நிலையில், தற்போது பயணிகளின் நிலையை கருத்தில் கொண்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 4ஆம் கட்ட ஊரடங்கின் போது அனுமதி அளிக்கப்படாத ஆட்டோ, ரிக்‌ஷாக்களுக்கு வருவாய் நிர்வாகத்துறை ஆணையர் வேண்டுகோளின் படி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் படி, விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் இருந்து ஆட்டோ, டாக்ஸி, ரிக்‌ஷாக்களை இயக்கலாம்.