ஆட்டோ வாடகை சேவை – யுபெர் அறிமுகம்

 

ஆட்டோ வாடகை சேவை – யுபெர் அறிமுகம்

இந்தியாவில் ஆட்டோக்களை மணிக்கணக்கில் வாடகைக்கு எடுத்துக்கொள்ளும் சேவையை யுபெர் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

ஆட்டோ வாடகை சேவை – யுபெர் அறிமுகம்

இதன்படி, ஒரு மணிநேரத்திற்கு 169 ரூபாய் – பத்து கீ.மீ என்ற கட்டணத்தில் பேக்கேஜ் தொடங்குகிறது என்றும் அதிகபட்சமாக 8 மணிநேரம் வரை ஆட்டோக்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று யுபெர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சேவையின் மூலமாக பயணிகள், குறிப்பிட்ட மணிநேரம்

ஆட்டோ வாடகை சேவை – யுபெர் அறிமுகம்

மற்றும் பயண தூரத்திற்கேற்ப எத்தனை இடங்களில் வேண்டுமானாலும் ஏறி இறங்கிக்கொள்ளலாம் என்றும் தேவையான இடத்திற்கு சென்று வரலாம் என்றும் 24 மணிநேரமும் இந்த சேவையை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ வாடகை சேவை – யுபெர் அறிமுகம்

சென்னை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட 6 நகரங்களில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வயதானவர்கள் மற்றும் அடிக்கடி ஷாப்பிங் உள்ளிட்ட சொந்த தேவைகளுக்கு பல இடங்களுக்கு சென்றுவருவோருக்கு இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.