கடன் தொல்லையால் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை… கோவையில் சோகம்!

 

கடன் தொல்லையால் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை… கோவையில் சோகம்!

கோவை

கோவை காந்திபுரத்தில் கடன் தொல்லையால் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மரத்தில் இன்று அதிகாலை காக்கி சட்டை, பேன்ட் அணிந்த நபர் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினார். இதனை அந்த வழியாக நடைபயிற்சி சென்றவர்கள் பார்த்து விட்டு, காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

கடன் தொல்லையால் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை… கோவையில் சோகம்!

அப்போது, அவரது சட்டையில் இருந்த அடையாள அட்டையில் பெயர் ஆனந்தகுமார் என்றும், ஆட்டோ ஓட்டுநர் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும், அவரது பேன்ட் பாக்கெட்டில் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக எழுதிவைத்த கடிதம் சிக்கியது. அதில், கடன் தொல்லை அதிகமானதால் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், கடனிலிருந்து மீள முடியாததால் தற்கொலை செய்து கொள்வதாகவும் அவர், தெரிவித்து இருந்தார்.

இதனை அடுத்து, கடிதத்தை கைப்பற்றிய போலீசார், உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு, உயிரிழந்த நபர் குறித்தும், தற்கொலைக்கான காரணம் குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கடன் தொல்லையால் ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காந்திபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.