பெண் எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுநர் கைது

 

பெண் எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுநர் கைது

கொரோனா ஊரடங்கையொட்டி வாகன தணிக்கையின் போது விதிகளை மீறி சென்ற ஆட்டோவை பறிமுதல் செய்ததால் பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு ஆட்டோ ஓட்டுனர் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண் எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுநர் கைது

கொரோனா விதிமுறைகளை மீறி வெளியே வருவோரின் வாகனங்களை போலீசார் சோதனை செய்துவருகின்றனர். அந்தவகையில் பிராட்வே பாரதி கல்லூரி சிக்னல் அருகில் முத்தியால்பேட்டை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்தவழியாக வந்த அட்டோர் ஓட்டுநர் அக்பர் அலி, முகக்கவசம் அணியாமல்,இ- பதிவின்றி ஆட்டோ ஓட்டிவந்ததாக கூறப்படுகிறது. அவரை தடுத்து நிறுத்திய போலீசார், ஆட்டோவை பறிமுதல் செய்தனர். தன் மீது நடவடிக்கை எடுத்த பெண் உதவி ஆய்வாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அக்பர் அலி, தனக்கு அமைச்சரைத் தெரியும் எனவும், அவரை வரச் சொல்லவா எனவும் மிரட்டினார்.

சென்னை பாரிமுனையில் பெண் எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுநர் அக்பர் அலி கைது செய்யப்பட்டார். அவர் மீது பொது ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல், தொற்று நோயை பரப்பும் செயல், கொடுந்தொற்றை பரப்பும் தீய நோக்கம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.