’ரெய்னா இடத்தில் இறங்க வேண்டியது இவரே’ ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் பரிந்துரை

’ரெய்னா இடத்தில் இறங்க வேண்டியது இவரே’ ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் பரிந்துரை

 ஐபிஎல் கோலாகலமாகத் தொடங்கி இருக்கிறது. கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் இன்னும் எட்டு நாள்களில் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற இருக்கின்றன.

முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸை எதிர்கொள்கிறது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் டீம். சென்ற ஆண்டில் ஒரே ஒரு ரன்னில் கோப்பையைத் தவற விட்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.

’ரெய்னா இடத்தில் இறங்க வேண்டியது இவரே’ ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் பரிந்துரை

எல்லோரின் கவனமும் சென்னை சூப்பர் கிங்ஸ் மேலேயே உள்ளது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ, இந்த ஐபிஎல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் டீமே வெல்லும் என உறுதிபடக் கூறியுள்ளார். அவர் மட்டுமல்லாது பலரின் கணிப்பும் இந்த ஆண்டு கோப்பை சிஎஸ்கே வுக்கே என்பதுதான்.

’ரெய்னா இடத்தில் இறங்க வேண்டியது இவரே’ ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் பரிந்துரை

ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் டீம்க்கு சோதனை சோதனையாக வந்துகொண்டிருக்கிறது. சென்னை பயிற்சிக்கு ஜடேஜா, ஹர்பஜனும் வரவில்லை என்றதும் ஒரு சர்ச்சை கிளம்பியது.

அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் டீமில் 13 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என்ற செய்தி அதிர வைத்தது. அதிலும் முக்கிய வீரர் தீபக் சாஹருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது பலருக்கும் அதிர்ச்சி.

’ரெய்னா இடத்தில் இறங்க வேண்டியது இவரே’ ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் பரிந்துரை

அடுத்த பேரதிர்ச்சி குடும்ப காரணங்களால் அதிரடி பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா ஐபில் போட்டியிலிருந்து விலகிக்கொண்டது. அவரைத் தொடர்ந்து சுழற்பந்து மன்னன் ஹர்பஜன் சிங்கும் சொந்த காரணங்களால் விலகிக்கொண்டார்.

சுரேஷ் ரெய்னாவின் இழப்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பேரிழப்பு. ஏனெனில், சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டுமே (2008-2015, 2018-2019) சுரேஷ் ரெய்னா 164 மேட்ச்களில் ஆடி, 4527 ரன்களைக் குவித்திருக்கிறார். 412 ஃபோர்களையும் 171 சிக்ஸர்களையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளாசியிருக்கிறார். இன்றைய தேதி வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிக ரன்கள் எடுத்த வீரர் சுரேஷ் ரெய்னாவே.

’ரெய்னா இடத்தில் இறங்க வேண்டியது இவரே’ ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் பரிந்துரை

ரெய்னா வழக்கமாக மூன்றாம் இடத்தில் பேட்டிங் ஆட இறங்குவார். அந்த இடத்தில் இப்போது யாரை இறக்குவது என்ற கேள்வியே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதன்மையான கேள்வி. கவுதம் கம்பீர் ரெய்னா இடத்தில் தோனியை இறங்கச் சொல்லியிருக்கிறார்.

’ரெய்னா இடத்தில் இறங்க வேண்டியது இவரே’ ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் பரிந்துரை

ஆனால், ஆஸ்திரேலியா வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓப்பனருமான ஷேன் வாட்ஸன் யாரைப் பரிந்துரை செய்திருக்கிறார் தெரியுமா?

’ரெய்னா இடத்தில் இறங்க வேண்டியது இவரே’ ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் பரிந்துரை

முரளி விஜயை. அவருக்கு டி20 போட்டிகளில் நல்ல அனுபவம் இருப்பதாலும் வேகப்பந்து, சுழற்பந்து இரண்டிலும் அவரால் திறமையாக விளையாடி ரன் சேர்க்க முடியும் என்பதாலும் முரளி விஜயை, ரெய்னா இடத்தில் இறக்கலாம் என்று பரிந்துரை செய்திருக்கிறார் ஷேன் வாட்சன்.

தல தோனி என்ன முடிவு எடுக்கப்போகிறாரா?