பும்ரா, அஸ்வின் பந்து வீச்சில் 195 ரன்களுக்குள் சுருண்டது ஆஸ்திரேலிய அணி! #IndVsAus

 

பும்ரா, அஸ்வின் பந்து வீச்சில் 195 ரன்களுக்குள் சுருண்டது ஆஸ்திரேலிய அணி! #IndVsAus

தற்போது ஆஸ்திரேலியா – இந்தியா அணிக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில் இந்திய பவுலர்கள் அசத்தி வருகிறார்கள்.

ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. ஒருநாள், டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் ஆட விருக்கின்றன.

இதுவரை நடந்திருக்கும் ஒருநாள் போட்டித் தொடரில் ஆஸ்திரேலியா அணி 2:1 வென்றது. டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 2:1 தொடரை வென்றது. அவை முடிந்ததும் டெஸ்ட் போட்டித் தொடங்கியது.

பும்ரா, அஸ்வின் பந்து வீச்சில் 195 ரன்களுக்குள் சுருண்டது ஆஸ்திரேலிய அணி! #IndVsAus

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி மிக மோசமாக ஆடியது. இரண்டாவது இன்னிங்க்ஸில் 36 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சித் தோல்வி அடைந்தது இந்திய அணி.

இன்று தொடங்கிய இரண்டாம் டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார் ரஹானே. மயங் அகர்வால், ஷப்னம் கில், புஜாரா, விஹாரி, ரிஷப் பண்ட், ரவிந்திர ஜடேஜா, ரவிசந்திரன் அஸ்வின், உமேஷ் யாதவ், பும்ரா, முகம்மது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள்.

இன்று டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

பும்ரா, அஸ்வின் பந்து வீச்சில் 195 ரன்களுக்குள் சுருண்டது ஆஸ்திரேலிய அணி! #IndVsAus

ஜோ பர்ன்ஸ், மாத்யூ வேட் இருவரும் ஓப்பனிங்கில் இறங்க, நான்காவது ஓவர் வீச வந்த பும்ரா, ரன் ஏதும் எடுக்கத் தொடங்காத பர்ன்ஸ் விக்கெட்டைத் தூக்கினார்.

பும்ராவோடு ஜோடி சேர்ந்த அஸ்வின் மறுபக்கம் விக்கெட் பறிக்கத் தொடங்கினார். அவர் வேட் விக்கெட்டை வீழ்த்தினார். அப்போது அவர் 30 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். இந்தப் போட்டியில் அறிமுகமாகும் சிராஜ் டெஸ்ட் போட்டியில் தனது விக்கெட்டை லபுசேன்னை வீழ்த்து பெற்றார்.

அதன்பிம் ஸ்டீவ் ஸ்வித் 0, ஹெட் 38, க்ரீன் 12, கேப்டன் டிம் 13, கம்மின்ஸ் 9, மிட்செல் ஸ்டார்க் 7, லயன் 20 என அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலிய அணி 195 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பும்ரா, அஸ்வின் பந்து வீச்சில் 195 ரன்களுக்குள் சுருண்டது ஆஸ்திரேலிய அணி! #IndVsAus

இந்திய பவுலர்கள் தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் அறிமுக வீரர் சிராஜ் 2 விக்கெட்டுகளையும் ஆல்ரவுண்டர் ஜடேஜா 1 விக்கெட்டுகளைப் பறித்தனர்.

ஒரே நாளில் 72.3 ஓவர்களில் 195 ரன்களுக்குள் ஆஸ்திரேலியாவைச் சுருட்டியது ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது.