ஆஸ்திரேலியா ஸ்கோர் 374 -சதம் அடித்தனர் ஸ்மித் – பின்ச்

 

ஆஸ்திரேலியா ஸ்கோர் 374 -சதம் அடித்தனர் ஸ்மித் – பின்ச்

ஆஸ்திரேலியா முதல் போட்டியிலேயே பெரும் ஸ்கோரை இந்தியாவுக்கு நிர்ணயித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிஒருநாள், டி20, டெஸ்ட் ஆகிய போட்டிகளில் ஆடிவருகிறது. இந்தத் தொடரில் முதன் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

ஆஸ்திரேலியா ஸ்கோர் 374 -சதம் அடித்தனர் ஸ்மித் – பின்ச்

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பேட்டிங் ஆட முடிவெடுத்தார். அதன்படி ஓப்பனிங் வீரர்களாக ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வார்னரும் இறங்கினர். மிக நிதானமாக ஆடினர். 27 ஓவர் வரை விக்கெட்டைப் பறிக்கொடுக்காமல் அதேநேரம் சீராக ரன்ரேட்டை காத்துக்கொண்டு இருவரும் ஆடினர். இருவரும் அனுபவம் மிக்க வீரர்கள் என்பதை தனது பேட்டிங்கில் காட்டி வந்தார்கள்.

27.5 ஓவரில் முகம்மது ஷமி வீசிய பந்தில் அவுட்டானார் டேவிட் வார்னர். அவர் 76 பந்துகளில் 69 ரன்களை அடித்திருந்தார். அதில் 6 பவுண்ட்ரிகள் அடங்கும். அடுத்து களம் இறங்கியிருப்பவர் ஸ்டீவ் ஸ்மித்.

ஆஸ்திரேலியா ஸ்கோர் 374 -சதம் அடித்தனர் ஸ்மித் – பின்ச்

இருவரும் இந்திய பவுலர்களின் பந்துகளைப் பதம் பார்த்தார்கள். அடுத்து கேப்டன் ஆரோன் பின்ச் சதம் அடித்தார். 124 பந்துகளில் 114 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானர்.

அடுத்து களம் இறங்கியவர் ஸ்டொயினிஸ். முதல் பந்திலேயே அவுட்டானார். இவர் விக்கெட்டை வீழ்த்தியது சஹல், அடுத்து மேக்ஸ்வெல் ஆட வந்தார். டி20 போட்டிகளில் சொதப்பிய மேக்ஸ்வெல் இதில் விளாசித்தள்ளினார். 19 பந்துகளில் 45 ரன்கள் எடுத்த நிலையில் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷமியின் பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

ஆஸ்திரேலியா ஸ்கோர் 374 -சதம் அடித்தனர் ஸ்மித் – பின்ச்

லாபுஸேன்ச் 2 ரன்களில் சைனி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். மறுபுறம் ஸ்மித் நிலைத்து ஆடிக்கொண்டிருந்தார். தனது நேர்த்தியான ஆட்டத்தில் சதம் அடித்தார் ஸ்டீவ் ஸ்மித். 62 பந்துகளில் 10 பவுண்ட்ரி, 4 சிக்ஸர்கலோடு சதத்தை நிறைவு செய்தார். கடைசி ஓவரில் ஷமியின் முதல் பந்தை பவுண்ட்ரிக்கு விரட்டிய ஸ்மித் அடுத்த பந்தில் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

ஆஸ்திரேலியா ஸ்கோர் 374 -சதம் அடித்தனர் ஸ்மித் – பின்ச்

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 374 ரன்கள் குவித்தது.