ஆஸ்திரேலிய வீரர் வார்னர் காயம் – போட்டிகளிலிருந்து விலகினார்

 

ஆஸ்திரேலிய வீரர் வார்னர் காயம் – போட்டிகளிலிருந்து விலகினார்

ஆஸ்திரேலிய வீரர் ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் ஒருநாள், டி20, டெஸ்ட் உள்ளிட்ட போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது.

முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் சொதப்பியதால், இரண்டு போட்டிகளிலுமே தோல்வியைத் தழுவியது இந்தியா. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாம் போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது. ஆஸ்திரேலியாவின் ஸ்மித் இரண்டு போட்டிகளிலும் சதம் அடித்தார்.

ஆஸ்திரேலிய வீரர் வார்னர் காயம் – போட்டிகளிலிருந்து விலகினார்

இரு போட்டிகளிலும் ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் ஓப்பனிங் இறங்கினர். செம பார்ட்னர்ஷிப் சேர்ந்து பந்துகளை விளாசி, ரன்களைச் சேர்த்தனர். முதல் போட்டியில், வார்னர் 69 ரன்களை எடுத்தார். மேலும் ஆரோன் பின்ச் விளையாட வழிகொடுத்தார். இரண்டாம் போட்டியில் 83 ரன்கள் அடித்தார். அதுவும் 77 பந்துகளில். இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெல்ல, இந்த அட்டகாசமான ஓப்பனிங் முக்கியக் காரணம்.

ஆஸ்திரேலிய வீரர் வார்னர் காயம் – போட்டிகளிலிருந்து விலகினார்

ஆனால், இரண்டாம் போட்டியில் டேவிட் வார்னர் காயம் அடைந்தார். அதனால், அவர் அடுத்த ஒரு நாள் போட்டியிலும், டி20 போட்டிகளிலும் ஆட முடியாது.

வார்னர் இல்லாதது, ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் இழப்புதான். ஆனால், கேப்டன் ஆரோன் பின்ச், ஸ்மித், லாபுசேன்ச், மேக்ஸ்வெல் செம ஃபார்மில் இருப்பதால் சமாளித்துக்கொள்வார்கள்.