’ஒரு வெற்றியாவது கிடைச்சுதே…’ ஆறுதலடையும் ஆஸ்திரேலியா #EngVsAus

 

’ஒரு வெற்றியாவது கிடைச்சுதே…’ ஆறுதலடையும் ஆஸ்திரேலியா #EngVsAus

இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று டி20 போட்டிக மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியுடன் மோதுகிறது இந்தப் பயணத்தில்.

நடந்து முடிந்த முதல் இரண்டு டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணியே வென்றது. இதன்மூலம் டி20 தொடரையும் இங்கிலாந்துக்கே கிடைத்தது.

உலகின் நம்பர் 1 அணியான ஆஸ்திரேலிய அணி, இப்படிச் சொதப்புவது பலருக்கும் ஆச்சர்யமாகவே இருந்தது. இந்நிலையில் 3-ம் டி20 போட்டியின் நிலவரங்களைப் பார்ப்போம்.

’ஒரு வெற்றியாவது கிடைச்சுதே…’ ஆறுதலடையும் ஆஸ்திரேலியா #EngVsAus

மூன்றாவது போட்டியிலும் டாஸ் வென்றது ஆஸ்திரேலியாதான். முதல் போட்டியில் பவுலிங், இரண்டாம் போட்டியில் பேட்டிங் என்று முடிவெடுத்திருந்தது. இரண்டிலும் தோல்வி. இப்போது மூன்றாம் போட்டியில் மீண்டும் முதலில் பவுலிங் என்று முடிவெடுத்தது.

முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியில் ஜானி பர்ஸ்டோ 44 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். ஜோ டென்லி 19 பந்துகளில் 29 ரன்களும்,மொய்ன் அலி 23 ரன்களும் எடுத்தனர், மற்ற வீரர்கள் சொல்லும்படியாக ஆடாததால்  20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களை மட்டுமே இங்கிலாந்து அணியால் எடுக்க முடிந்தது.

’ஒரு வெற்றியாவது கிடைச்சுதே…’ ஆறுதலடையும் ஆஸ்திரேலியா #EngVsAus

ஆஸ்திரேலிய பவுலிங் தரப்பில் ஆடம் ஸாம்பா 34 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் பின்ச் 39 ரன்களும், மார்கஸ் ஸ்டொனிஸ் 26 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஏனெனில், மேக்ஸ்வெல், 6 ரன்களோடும், ஸ்டீவ் ஸ்மித் 3 ரன்களோடும் அவுட்டாகி நடையைக் கட்டினார்கள்.

’ஒரு வெற்றியாவது கிடைச்சுதே…’ ஆறுதலடையும் ஆஸ்திரேலியா #EngVsAus

இறுதியாக மார்ஸ் நிலைத்து ஆடி 39 ரன்களை எடுத்து வெற்றிக்கு வழி வகுத்துக்கொண்டார். இறுதியில் 3 பந்துகள் இருக்கும் நிலையில் ஆஸ்திரேலியா 146 ரன்களை எடுத்து இந்தப் போட்டியை  வென்றது.