ஆஸ்திரேலியா அபார வெற்றி – இந்திய அணிக்கு முதல் தோல்வி

 

ஆஸ்திரேலியா அபார வெற்றி – இந்திய அணிக்கு முதல் தோல்வி

ஆஸ்திரேலியா – இந்தியா தொடரில் முதன் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பேட்டிங் ஆட முடிவெடுத்தார். அதன்படி ஓப்பனிங் வீரர்களாக ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வார்னரும் இறங்கினர்.

டேவிட் வார்னர் ஆட்டமிழக்கும்போது 76 பந்துகளில் 69 ரன்களை அடித்திருந்தார். அதில் 6 பவுண்ட்ரிகள் அடங்கும். அடுத்து களம் இறங்கியிருப்பவர் ஸ்டீவ் ஸ்மித். இருவரும் இந்திய பவுலர்களின் பந்துகளைப் பதம் பார்த்தார்கள். அடுத்து கேப்டன் ஆரோன் பின்ச் சதம் அடித்தார். 124 பந்துகளில் 114 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானர்.

ஆஸ்திரேலியா அபார வெற்றி – இந்திய அணிக்கு முதல் தோல்வி

அடுத்து ஆடிய ஸ்மித்தும் சதம் அடித்தார். மற்ற பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாட ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 374 ஆக உயர்ந்தது.

375 ரன்கள் எனும் இமாலய ஸ்கோரை நோக்கி ஆடத் தொடங்கிய இந்திய வீரர்கள் மயங் அகர்வால் 22, கோலி 21, ஸ்ரேயாஸ் 2, கே.எல். ராகுல் 12 என சொற்ப ரன்களில் அவுட்டகி 100 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளைப் பறிக்கொடுத்தது.

ஆஸ்திரேலியா அபார வெற்றி – இந்திய அணிக்கு முதல் தோல்வி

தவான் மற்றும் பாண்டியா ஆடி வருகிறார்கள். இன்னும் அடித்து ஜடேஜா மட்டுமே உள்ளார். தோல்வியைத் தவிர்க்க தவான் – பாண்டியா ஜோடி நல்ல பார்டனர்ஷிப்பை கொடுக்க வேண்டும் என்ற பலரின் எதிர்ப்பாபு நடந்தது.

தவான் 74 ரன்களில் அவுட்டானார். அதிடியாக ஆடிய ஹிர்திக் பாண்டியா 76 பந்துகலில் 90 ரன்கள் குவித்தார். ஆனால், அவர் ஆட்டமிழந்ததும் இந்திய அணி தோல்வியை நோக்கிச் சென்றது. ஜடேஜா 37 பந்துகளில் 25 ரன்களே எடுத்தார்.

ஆஸ்திரேலியா அபார வெற்றி – இந்திய அணிக்கு முதல் தோல்வி

இறுதியாக 50 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் ஆஸ்திரேலியா 66 அன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 66 பந்துகளில் 105 ரன்கள் விளாசிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.