அஸ்வின், உமேஷ் யாதவ்.. பந்து வீச்சில் ஆஸ்திரேலியா 191 ரன்களுக்குள் சுருட்டப்பட்டது – IndVsAus

அஸ்வின், உமேஷ் யாதவ்.. பந்து வீச்சில் ஆஸ்திரேலியா 191 ரன்களுக்குள் சுருட்டப்பட்டது – IndVsAus

இந்திய அணியில் பவுலர்கள் பெரிய மேஜிக்கையே நிகழ்த்தி விட்டார்கள் இன்று. நேற்று தொடங்கிய இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது.

ப்ரித்தீவ் ரன் ஏதும் எடுக்காமல் மிட்செல் ஸ்டார்க்கிடம் விக்கெட்டைப் பறிக்கொடுத்தார். 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பேட் கம்மின்ஸ் வீசிய பந்தில் விக்கெட்டைப் பறிக்கொடுத்தார் மயங். 160 பந்துகளைச் சந்தித்த புஜாரா 43 ரன்களை எடுத்திருந்தார்.

அஸ்வின், உமேஷ் யாதவ்.. பந்து வீச்சில் ஆஸ்திரேலியா 191 ரன்களுக்குள் சுருட்டப்பட்டது – IndVsAus

74 ரன்களை விராட் கோலி எடுத்திருந்த நிலையில் ரன் அவுட்டானார். அடுத்த சில ஓவர்களில் ரஹானே 42 ரன்களில் எல்.பி.டபுள்யூ முறையில் அவுட்டானார். விஹாரி 16 ரன்களோடு அவுட்டானர்.

நேற்றைய ஆட்ட முடிவில் 233 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கியது. 11 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிக்கொடுத்தது.

அஸ்வின், உமேஷ் யாதவ்.. பந்து வீச்சில் ஆஸ்திரேலியா 191 ரன்களுக்குள் சுருட்டப்பட்டது – IndVsAus

அடுத்து ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ வேட் மற்றும் ஜோ பர்ன்ஸ் ஆகியோர் ஓப்பனிங் வீரர்களாக களமிறங்கினர். வெகு நிதானமாக ஆடினர் இருவரும்.

51 பந்துகளில் 8 ரன்கள் எதிருந்த வேட் விக்கெட்டை எல்.பி.டபுள்யூ முறையில் தூக்கினார் இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. அடுத்த சில ஓவர்களில் பும்ராவின் புயல் வேகப் பந்துவீச்சு ஜோ பர்ன்ஸ் விக்கெட்டையும் பறித்தது. அப்போது அவர் 8 ரன்கள் எடுத்திருந்தார்.

மதிய உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இடைவெளிக்குப் பிறகு பந்து வீச வந்தார் தமிழகத்தின் அஸ்வின். அவர் சுழற்பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தடு ஸ்மித்.

அஸ்வின், உமேஷ் யாதவ்.. பந்து வீச்சில் ஆஸ்திரேலியா 191 ரன்களுக்குள் சுருட்டப்பட்டது – IndVsAus

அடுத்து, 7 ரன்கள் எடுத்திருந்த ஹெட், ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய பந்தில் அஸ்வினிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். நிதானமாக ஆடி வந்த க்ரீன் விக்கெட்டைப் பறித்தது அஷ்வின் தான். க்ரீன் 11 ர்ன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தை அடிக்க, அது விராட் கோலியிடம் கேட்ச்சாக மாற ஆட்டமிழந்தார்.

அஸ்வினில் சுழலில் சிக்கியுள்ளது ஆஸ்திரேலியா. இதுவரை மூன்று விக்கெட்டுகளை அஸ்வின் பறித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து இன்னொரு விக்கெட்டையும் பறித்தார் அஸ்வின்.

அஸ்வின், உமேஷ் யாதவ்.. பந்து வீச்சில் ஆஸ்திரேலியா 191 ரன்களுக்குள் சுருட்டப்பட்டது – IndVsAus

72.1 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறது. தொடக்கத்தில் விக்கெட் ஏதும் எடுக்காத உமேஷ் யாதவ் கடைசியில் விக்கெட் மழைபெய்ய வைத்தார். ஆம், உமேஷ் யாதவ் 4, அஸ்வின் 3, பும்ரா 3 என ஆஸ்திரேலிய வீரர்களை கட்டுக்குள் வைத்து வீழ்த்தினர்.

ஆஸ்திரேலிய தரப்பில் கேப்டன் டிம் மட்டுமே 73 ரன்களை எடுத்தார். மற்றவர்கள் பெரிய அளவில் சோபிக்க வில்லை.