ஆஸ்திரேலியா முதல் பேட்டிங் – தொடர்ந்து அணியில் இடம்பெற்றுள்ள நடராஜன்

 

ஆஸ்திரேலியா முதல் பேட்டிங் – தொடர்ந்து அணியில் இடம்பெற்றுள்ள நடராஜன்

ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் சென்றுள்ளது. இரு அணிகளும் ஆடும், டி20 போட்டித் தொடரில் இதுவரை 2 போட்டிகள் முடைவடைந்திருக்கின்றன. அவற்றில் இரண்டிலுமே இந்தியாவே வென்றிருக்கிறது. இரண்டு போட்டிகளிலும் தமிழகத்தின் நடராஜன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு பெரும் பங்களிப்பு செய்தனர். இதனால், டி20 போட்டித் தொடரை இந்தியா வென்று விட்டது.

ஆஸ்திரேலியா முதல் பேட்டிங் – தொடர்ந்து அணியில் இடம்பெற்றுள்ள நடராஜன்

டி20 போட்டித் தொடரில் இன்னும் ஒரு போட்டி மட்டுமே மீதம் உள்ளது. அது இன்று மதியம் தொடங்கியுள்ளது. இதிலும் இந்தியா வென்று ஆஸ்திரேலியாவை வாஷ் அவுட் செய்யவே ஆசைப்படுகிறது.

இன்று டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பவுலிங் செய்ய முடிவெடுத்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி தற்போது பேட்டிங் ஆடி வருகிறது.

ஆஸ்திரேலியா முதல் பேட்டிங் – தொடர்ந்து அணியில் இடம்பெற்றுள்ள நடராஜன்

இந்திய அணியில் மாற்றம் ஏதும் இல்லை. பும்ரா, மயங் அகர்வால் சேர்க்கப்படுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு அடக்க வில்லை. இம்முறையும் நடராஜன் அணியில் இடம்பிடித்துள்ளார். இந்தப் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்தால் தொடர் நாயகன் பட்டம் வெல்லும் வாய்ப்பு நடராஜனுக்கு உள்ளது.

ஆஸ்திரேலியா முதல் பேட்டிங் – தொடர்ந்து அணியில் இடம்பெற்றுள்ள நடராஜன்

ஆஸ்திரேலிய அணியில், ஆரோன் பின்ச் மீண்டும் களம் கண்டுள்ளார். ஆனால், ரன் ஏதும் எடுக்காமல் வாஷிங்டன் சுந்தர் பந்து வீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். தற்போது மாத்யூ வேட் மற்றும் ஸ்மித் ஆடி வருகிறார்கள்.