அபார வெற்றியோடு கணக்கைத் தொடங்கியது ஆஸ்திரேலியா EngVsAus

அபார வெற்றியோடு கணக்கைத் தொடங்கியது ஆஸ்திரேலியா EngVsAus

ஒருநாள் தொடரின் முதல் வெற்றியோடு தனது பயணத்தைத் தொடங்கியிருக்கிறது ஆஸ்திரேலியா கிரிக்கெட் டீம்.

இங்கிலாந்தில் சுற்றுபயணத்தில் உள்ளது ஆஸ்திரேலியா டீம். இதில் மூன்று டி20 போட்டிகளும் மூன்று ஒருநாள் போட்டிகளும் ஆடத் திட்டமிட்டுள்ளன இருஅணிகளும்.

அபார வெற்றியோடு கணக்கைத் தொடங்கியது ஆஸ்திரேலியா EngVsAus

முதலில் நடைபெற்ற டி20 தொடரில் முதல் 2 போட்டிகளை வென்று இங்கிலாந்து தொடரைக் கைப்பற்றியது. கடைசி மற்றும் மூன்றாம் போட்டியில் மட்டும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதே அந்நாட்டு ரசிகர்களுக்கு ஆறுதலாக இருந்தது.

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று இரவு (இந்திய நேரப்படி) நடந்தது. டாஸ் வின் பண்ணிய இங்கிலாந்து அணி, முதலில் பவுலிங் செய்ய முடிவெடுத்தது.

ஆஸ்திரேலிய அணிக்குத் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஓப்பனிங் இறங்கிய அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் 6 ரன்களில் ஜப்ரா ஆர்க்சர் வீசிய பந்தில் அவுட் ஆனார்.

அபார வெற்றியோடு கணக்கைத் தொடங்கியது ஆஸ்திரேலியா EngVsAus

கேப்டன் ஆரோன் பின்ச் 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மார்க் வுட் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி விட்டார். மூன்றாவதாக இறக்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் 34 பந்துகளில் 43 ரன்கள் விளாசி ஆடிக்கொண்டிருந்தார். அவரும் பின்ச் போலவே மார்க் வுட் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி விட்டார்.

அபார வெற்றியோடு கணக்கைத் தொடங்கியது ஆஸ்திரேலியா EngVsAus

மிட்சேல் மார்ஸ் 73 ரன்களும் மேக்ஸர் 77 (59பந்துகளில்) ரன்களும் விளாசியதால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. இன்னொரு பக்கம் விக்கெட் விழுவதும் தொடந்துகொண்டே இருந்தது. இறுதியாக, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்தௌ 294 ரன்கள் எடுத்திருந்தது.

அபார வெற்றியோடு கணக்கைத் தொடங்கியது ஆஸ்திரேலியா EngVsAus

இங்கிலாந்து பவுலிங் தரப்பில் ஜாஃப்ரா ஆர்க்சர், மார்க் வுட் ஆகியோஒர் தல 3 விக்கெட்டுகளையும், ரஷீத் 2 விக்கெட்டுகளையும் கிறிஸ் வோக்ஸ் 1 விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.

அபார வெற்றியோடு கணக்கைத் தொடங்கியது ஆஸ்திரேலியா EngVsAus

ஒருநாள் போட்டியில் இது நல்ல ஸ்கோர்தான். ஆனால், டி20 போட்டிகளிலேயே 200 ரன்களைக் கடக்கும் நிலை வந்துவிட்டதால் இந்த ஸ்கோரை இங்கிலாந்து கடந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

இங்கிலாந்து அணியில் ஜாசன் ராயும் ஜானி பர்ஸ்டோவும் ஓப்பனிங் இறங்கினார்கள். அதிர்ச்சி தரும் விதமாக 3 ரன்களோடு விரைபெற்றார் ஜாசன் ராய். பேர்ஸ்டோ நிலைத்து நின்று ஆடினார்.

அபார வெற்றியோடு கணக்கைத் தொடங்கியது ஆஸ்திரேலியா EngVsAus

ஆனால் எதிர்புறம் இருந்த வீரர்கள் ஜோ ரூட் 1 ரன், கேப்டன் மோர்கன், 23 ரன்கள், விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லர் 1 ரன் என அவுட்டாகி கொண்டே இர்நுதனர். சாம் பில்லிங்ஸ் வந்ததும்தான் பார்ட்னர் ஷிப் கைக்கொடுத்தது. பர்ஸ்டோ தனது நிதானமாக ஆடி, 107 பந்துகளில் 84 ரன்களை எடுத்தார். பில்லிங் 110 ரன்களில் 118 ரன்கள் குவித்தார்.

மற்றவர்கள் எவரும் சொல்லும்படி ஆடாததால் 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது இங்கிலாந்து அணி வீரர்களால்.

அபார வெற்றியோடு கணக்கைத் தொடங்கியது ஆஸ்திரேலியா EngVsAus

ஆஸ்திரேலியா பவுலிங் தரப்பில் ஆடம் ஸாம்பா 55 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜோஷ் ஜஸ்லேவுட் 10 ஓவர்கள் வீசி 26 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரே ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அபார வெற்றியோடு கணக்கைத் தொடங்கியது ஆஸ்திரேலியா EngVsAus

இதன்மூலம் 19 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முதல் வெற்றியை தனதாக்கிக் கொண்டிருக்கிறது ஆஸ்திரேலியா அணி.

ஆஸ்திரேலிய அணிக்கு இந்த வெற்றி தொடருமா… இங்கிலாந்து அதைத் தடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.