“இந்திய விமானங்களுக்கு நோ என்ட்ரி” – முக்கிய நாடு அதிரடி முடிவு!

 

“இந்திய விமானங்களுக்கு நோ என்ட்ரி” – முக்கிய நாடு அதிரடி முடிவு!

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பரவல் எத்தனை வீரியமாக இருக்கிறது என்பதைக் கடந்த இரு வாரமாக நாடு கண்டுவருகிறது. நாட்டு மக்கள் அனைவரையும் கொரோனா பீதியில் ஆழ்த்தியிருக்கிறது. தினசரி உயிரிழப்புகள் படிபடியாகக் கூடிக்கொண்டே இருக்கிறது. உபி, குஜராத் ஆகிய மாநிலங்களில் சடலங்களை நடைபாதையில் போட்டு எரிக்கும் அவலங்களும் ஏற்பட்டுள்ளன.

“இந்திய விமானங்களுக்கு நோ என்ட்ரி” – முக்கிய நாடு அதிரடி முடிவு!

இவையனைத்திற்கும் இரட்டை உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் தான் காரணம் என்று அணுமானிக்கின்றனர் ஆய்வாளர்கள். உயிரியல் பரிணாமப்படி அனைத்து வைரஸ்களும் இவ்வாறு உருமாறுவது இயல்பு. அப்படி மாறும்போது சில வைரஸ்களின் தீவிரம் குறையும் அல்லது முன்பை விட வீரியமாக இருக்கும். தற்போது இந்தியாவில் தோன்றியிருக்கும் இந்தப் புதிய வைரஸ் பயங்கர வீரியத்துடன் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

“இந்திய விமானங்களுக்கு நோ என்ட்ரி” – முக்கிய நாடு அதிரடி முடிவு!

இதனால் இந்தியாவிலிருந்து வருபவர்களால் இந்தப் புதிய வகை வைரஸ் பரவலாம் என்பதால் பல்வேறு நாடுகள் போக்குவரத்து தடையை அறிவித்துள்ளன. தற்போது ஆஸ்திரேலிய நாடு இந்தியாவிலிருந்து விமானங்கள் வர மே 15ஆம் தேதி வரை தடை போட்டுள்ளது. இதற்கு முன்னதாக நியுஸிலாந்து, ஈரான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.