அரோபிந்தோ பார்மா லாபம் ரூ.770 கோடி.. பங்கு ஒன்றுக்கு இடைக்கால டிவிடெண்ட் ரூ.1.50

 

அரோபிந்தோ பார்மா லாபம் ரூ.770 கோடி.. பங்கு ஒன்றுக்கு இடைக்கால டிவிடெண்ட் ரூ.1.50

அரோபிந்தோ பார்மா 2021 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.769.97 கோடி ஈட்டியுள்ளது.

மருந்து துறையை சேர்ந்த நிறுவனமான அரோபிந்தோ பார்மா தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை அண்மையில் வெளியிட்டுள்ளது. அரோபிந்தோ பார்மா 2021 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.769.97 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 1.68 சதவீதம் குறைவாகும். 2020 ஜூன் காலாண்டில் அரோபிந்தோ பார்மா நிகர லாபமாக ரூ.783.16 கோடி ஈட்டியிருந்தது.

அரோபிந்தோ பார்மா லாபம் ரூ.770 கோடி.. பங்கு ஒன்றுக்கு இடைக்கால டிவிடெண்ட் ரூ.1.50
அரோபிந்தோ பார்மா

2021 ஜூன் காலாண்டில் அரோபிந்தோ பார்மா நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் செயல்பாட்டு வாயிலான மொத்த வருவாயாக ரூ.5,701.98 கோடி ஈட்டியுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் அரோபிந்தோ பார்மா நிறுவனம் ரூ.5,924.78 கோடியை செயல்பாட்டு வாயிலான மொத்த வருவாயாக ஈட்டியிருந்தது. 2021 ஜூன் காலாண்டில் அரோபிந்தோ பார்மா நிறுவனம் செலவினமாக ரூ.4,785.17 கோடி மேற்கொண்டு இருந்தது.

அரோபிந்தோ பார்மா லாபம் ரூ.770 கோடி.. பங்கு ஒன்றுக்கு இடைக்கால டிவிடெண்ட் ரூ.1.50
அரோபிந்தோ பார்மா

அரோபிந்தோ பார்மா நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.1.50ஐ இடைக்கால டிவிடெண்ட் அறிவித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது, அரோபிந்தோ பார்மா நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.67 சதவீதம் உயர்ந்து ரூ.731.25ஆக இருந்தது.