தென்பெண்ணை ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கு விழா ரத்து!

தென்பெண்ணை ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கு விழா ரத்து!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் மக்கள் ஒரே இடங்களில் கூடக் கூடாது என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருவதால், தமிழகத்தில் நடைபெறும் பல திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தென்பெண்ணை ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கு விழா ரத்து!

அந்த வகையில் நாளை ஆடி பதினெட்டு என்பதால் ஆறுகளில் புனித நீராட மக்கள் கூட்டம் அதிகளவு கூடுவது வழக்கம். ஆனால் இந்த முறை கொரோனாவால் ஊரடங்கு நீடிக்கப்பட்டதால் ஆடிப்பெருக்கு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கு விழா ரத்து!

இந்நிலையில் கிருஷ்ணகிரி தென்பெண்ணை ஆற்றங்கரையில் ஆண்டுதோறும் நடக்கும் ஆடிப்பெருக்கு விழாவானது ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீடித்ததால் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தென்பெண்ணை ஆற்றில் பொதுமக்கள் புனித நீராட மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.