’ஆடியன்ஸ் அனுமதிக்கப்படுவார்கள்’ ஒலிம்பிக் கமிட்டி தலைவர் நம்பிக்கை

 

’ஆடியன்ஸ் அனுமதிக்கப்படுவார்கள்’ ஒலிம்பிக் கமிட்டி தலைவர் நம்பிக்கை

விளையாட்டு துறையில் மாபெரும் திருவிழா ஒலிம்பிக். பல்வேறு திறமைகளைக் கண்டு உலகமே வியக்கும் அற்புதம் ஒலிம்பிக். பல சாதனைகள் முறியடிக்கப்படும். எண்ணற்ற புதிய சாதனைகள் படைக்கப்படும். எனவே உலக விளையாட்டு ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் எதிர்பார்ப்பது ஒலிம்பிக் போட்டிகளைத்தான்.

வழக்கமான திட்டத்தின்படி, இந்த ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், உலகம் முழுவதும் சுழற்றி அடித்து வரும் கொரோனா பரவல் காரணமாக, 2021 ஆம் ஆண்டுக்கு ஒலிம்பிக் திருவிழா ஒத்திவைக்கப்பட்டது.

’ஆடியன்ஸ் அனுமதிக்கப்படுவார்கள்’ ஒலிம்பிக் கமிட்டி தலைவர் நம்பிக்கை

2021-ம் வருடம் ஜூலை மாதம் 23-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி வரை ஜப்பான் நாட்டில் நடைபெற உள்ளது. இதற்காகக் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசும் ஒலிம்பிக் குழுவும் ஈடுபட்டுள்ளன.

வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும், முதலில் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மட்டுமே மைதானத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என்று ஒலிம்பிக் நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், ஒலிம்பிக் ரசிகர்கள் வருத்தமடைந்தனர். நேரில் ஒவ்வொரு சாதனையையும் பார்ப்பதுபோல இருக்காதே என்று கவலைப்பட்டார்கள். அவர்களுக்கு புதிய தகவல் வெளியாகியுள்ளது.

’ஆடியன்ஸ் அனுமதிக்கப்படுவார்கள்’ ஒலிம்பிக் கமிட்டி தலைவர் நம்பிக்கை

ஒலிம்பிக் நிர்வாக கமிட்டியின் தலைவர் தாமஸ் பேச் பேசுகையில், ‘கொரோனா குறித்த விழிப்புணர்வோடு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்கிறோம். பார்வையாளர்களை மைதானத்திற்கு அனுமதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்று தெரிவித்திருக்கிறார்.