பார்வையாளர்கள் குறைந்த ட்ரம்ப் – ஜோ பைடன் விவாத நிகழ்ச்சி!

 

பார்வையாளர்கள் குறைந்த ட்ரம்ப் – ஜோ பைடன் விவாத நிகழ்ச்சி!

குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார். ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஜோ பிடன். துணை அதிபராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்யப்படிருக்கிறார்.

அமெரிக்காவில் போட்டியிடும் கட்சிகளின் தலைவர்கள் தேர்தலுக்கு முன்பு பொது விவாதங்களில் கலந்துகொள்வது வழக்கம். அதன்படி, அதிபர் ட்ரம்ப் – ஜோ பைடன் நேருக்கு நேராக விவாதிக்கும் சென்ற மாதம் 29-ம் தேதி நடந்தது. இரண்டாம் விவாதம் அக்டோபர் 22-ம் தேதியும் நடந்தது. ட்ரம்ப் – பைடன் விவாதத்தை 15 மேற்பட்ட ஊடகங்கள் லைவாக ஒளிப்பரப்பின.

பார்வையாளர்கள் குறைந்த ட்ரம்ப் – ஜோ பைடன் விவாத நிகழ்ச்சி!

இரண்டாம் விவாதத்தை 63 மில்லியன் (6.3 கோடி) பார்வையாளர்கள் பார்த்திருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதில் Fox சேனல் வழியே 14.7 மில்லியன், சி.என்.என் மூலம் 7.2 மில்லியன், MSBBC மூலம் 6.7 மில்லியன், CBS மூலம் 5.5 மில்லியன் உள்ளிட்ட பார்வையாளர்களும் பார்த்துள்ளனர்.

ஆனால், ட்ரம்ப் – பைடன் இருவருக்கும் இடையே முதல் விவாதத்தை 73.1 மில்லியன் (7.31 கோடி) பார்வையாளர்கள் பார்த்திருக்கிறார்கள். முதல் விவாதத்தை விட இரண்டாம் விவாதத்திற்கு பார்வையாளர்கள் குறைந்து விட்டனர்.

பார்வையாளர்கள் குறைந்த ட்ரம்ப் – ஜோ பைடன் விவாத நிகழ்ச்சி!

2016 ஆம் ஆண்டும் நடந்த அமெரிக்க தேர்தலில் ட்ரம்ப் – ஹிலாரி கிளிண்டல் இருவருக்கும் இடையேனா விவாத நிகழ்ச்சியை 84 மில்லியன் (8.4 கோடி) பார்வையாளர்கள் பார்த்திருக்கிறார்கள். அவற்றோடு ஒப்பிடுகையில் தற்போதைய விவாதத்திற்கு பார்வையாளர்கள் குறைந்திருக்கிறார்கள்.