ஆத்தூர் கூலமேடு ஜல்லிக்கட்டு; 700 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

 

ஆத்தூர் கூலமேடு ஜல்லிக்கட்டு; 700 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

சேலம்

ஆத்தூர் அடுத்த கூலமேடு கிராமத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள கூலமேடு கிராமத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தை 2ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுது வழக்கம். நடப்பாண்டு மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் சேலம் மட்டுமின்றி, திருச்சி, ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 700-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதேபோல் போட்டியில் 500 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர்.

ஆத்தூர் கூலமேடு ஜல்லிக்கட்டு; 700 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் போட்டியை தொடங்கி வைத்தார். போட்டியின் முதல் காளையாக, கோயில் காளை திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, கால்நடை மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக திறக்கப்பட்டு வருகிறது. சீறி செல்லும் காளைகளை, இளம் காளையர்கள் அடக்க முயன்றனர். இதில் மாடுகள் முட்டியதில் 10 பேர் வரை காயம் அடைந்தனர்.

அவர்களுக்கு மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சையை அளித்தனர். போட்டியை சேலம் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு போட்டியை ஒட்டி 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்