திருமணத்தை பிரேக்கிங் நியூஸாக மாற்றிய வினோதம்… கொரோனா நேரத்திலும் ஓர் குபீர் மொமென்ட்!

 

திருமணத்தை பிரேக்கிங் நியூஸாக மாற்றிய வினோதம்… கொரோனா நேரத்திலும் ஓர் குபீர் மொமென்ட்!

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பல திருமணங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இது பல காதல் ஜோடிகளிடையே வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தாலும், சிலர் வீடுகளிலேயே எளிமையாக திருமணம் செய்து கொள்கின்றனர். அதே போல, கோவில்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றி வீட்டார் முன்னிலையில் திருமணங்கள் நடக்கிறது. இப்படி பல வகையாக திருமணங்கள் நடந்து கொண்டிருக்கையில், கடலூர் மாவட்டத்தில் ஒரு புதுமணத் தம்பதி.. மக்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் திருமண பேனர் அடித்திருப்பது இணைய தளத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

திருமணத்தை பிரேக்கிங் நியூஸாக மாற்றிய வினோதம்… கொரோனா நேரத்திலும் ஓர் குபீர் மொமென்ட்!

கடலூர் மாவட்டம் கானூர் ஊராட்சியில் பாஸ்கர் மற்றும் ஜெயா என்ற காதல் ஜோடிக்கு கடந்த 1 ஆம் தேதி திருமணம் நடந்து முடிந்துள்ளது. வழக்கமாக மணமகன் மற்றும் மணமகளின் பெயர், இடம், ஊர், திருமண நாள் உள்ளிட்ட விவரங்கள் போட்டு பேனர்கள் அச்சடிக்கப்படும். ஆனால், இந்த தம்பதியின் திருமண பேனர் தான் இங்க ஹைலைட்.

அதாவது, தங்கள் திருமண பேனரையே பிரேக்கிங் நியூஸ் போல டிசைன் செய்து அச்சடித்துள்ள இந்த பேனர் காண்போரை வியக்கச்செய்கிறது. பிரேக்கிங் நியூஸ் தலைப்பில், ஊரடங்கில் ஓர் உற்சாகம் என்றும் கன்டண்ட்டில் திருமணத்துக்கு அன்புடன் வரவேற்கிறோம் என்றும் அந்த பேனரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பேனரை அச்சடிக்க ரூம் போட்டு யோசிச்சு இருப்பாங்களோ..!