“நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என கவனஈர்ப்பு தீர்மானம்” – திமுக எம்.பி., டி.ஆர்.பாலு

“நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என கவனஈர்ப்பு தீர்மானம்” – திமுக எம்.பி., டி.ஆர்.பாலு

மேகதாது அணை கட்ட மாட்டோம் என்பது தொடர்பாக பிரதமர் நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

“நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என கவனஈர்ப்பு தீர்மானம்” – திமுக எம்.பி., டி.ஆர்.பாலு

அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பிறகு திமுக எம்.பி., டி.ஆர்.பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ” நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும். கொரோனா தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் பிரதமர் தனியாக பவர் பாயின்ட் மூலம் விளக்கம் தருவார் என கூறப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். மேகதாது அணை கட்ட மாட்டோம் என்பது தொடர்பாக பிரதமர் நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும்.

“நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என கவனஈர்ப்பு தீர்மானம்” – திமுக எம்.பி., டி.ஆர்.பாலு

கொரோனா தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினோம்; ஆனால், விவாதிப்பார்களா என்ற சந்தேகம் உள்ளது. தமிழ்நாட்டின் பிரச்னைகளை பேச இருப்பது குறித்து தெரிவித்தோம். டீசல், பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக பேச இருப்பதாக தெரிவித்தோம்.மேகதாது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்படும், அக்கூட்டத்தில் மத்திய அரசின் பதிலை தெரியுங்கள் என கூறினோம். மேகதாது அணை கட்ட மாட்டோம் என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும்; ஆனால், உறுதி அளிப்பாரா என்பது தெரியாது” என்றார்.