தேனியில் அடுத்தடுத்து 2 ஏடிஎம்-களில் கொள்ளை முயற்சி

 

தேனியில் அடுத்தடுத்து 2 ஏடிஎம்-களில் கொள்ளை முயற்சி

தேனி

தேனி அருகே அடுத்தடுத்து 2 ஏ.டி,எம்-களில் மெஷின் மற்றும் கண்ணாடியை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் கரூர் வைஸ்யா வங்கியின் ஏடிஎம் மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று காலை எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மிற்கு பணம் எடுக்க சென்றவர்கள், ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தேனியில் அடுத்தடுத்து 2 ஏடிஎம்-களில் கொள்ளை முயற்சி

இதுகுறித்து, அவர்கள் ராயப்பன்பட்டி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சின்னமனூர் டிஎஸ்பி சின்னக்கண்ணு தலைமையிலான போலீசார், அங்கு விசாரணை மேற்கொண்டனர். அப்போது மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கில், ஏடிஎம்மை உடைக்க முயன்றதும், அது முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதும் தெரியவந்தது. இந்த நிலையில், அங்குள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏடிஎம்மின் கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.

தேனியில் அடுத்தடுத்து 2 ஏடிஎம்-களில் கொள்ளை முயற்சி

அடுத்தடுத்து நடந்த இரு கொள்ளை முயற்சி தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஏடிஎம்களில் இருந்த சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மர்மநபர் ஒருவர் ஏடிஎம்மை உடைக்க முயன்றது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.