மின்கோபுரத்தில் சாய்ந்து செல்பி எடுக்க முயற்சி… 16 சிறுவன் உள்பட இருவர் படுகாயம்…

 

மின்கோபுரத்தில் சாய்ந்து செல்பி எடுக்க முயற்சி… 16 சிறுவன் உள்பட இருவர் படுகாயம்…

திருவள்ளூர்

ஊத்துக்கோடையில் மேம்பாலத்தின் மீதுள்ள மின்கோபுரத்தில் செல்பி எடுக்க முயன்ற 16 வயது சிறுவன் உள்பட இருவர் மின்சாராம் தாக்கி படுகாயம் அடைந்தனர்.

மின்கோபுரத்தில் சாய்ந்து செல்பி எடுக்க முயற்சி… 16 சிறுவன் உள்பட இருவர் படுகாயம்…

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் உள்ள ஆரணி ஆற்றில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றின் மீது மேம்பாலம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில், அந்தபகுதி பொதுமக்கள் கட்டிமுடிக்கப்படாத மேம்பாலத்தின் மீதுள்ள படிகட்டுகள் மூலம் ஏறிச்சென்று ஆரணி ஆற்றை ஆபத்தான முறையில் கடந்துவருகின்றனர்.

மின்கோபுரத்தில் சாய்ந்து செல்பி எடுக்க முயற்சி… 16 சிறுவன் உள்பட இருவர் படுகாயம்…

இந்த நிலையில், சீத்தஞ்சேரியை சேர்ந்த சரண் (16) மற்றும் ஒதப்பை பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (24) ஆகியோர் நேற்று ஊத்துகோட்டை மேம்பாலத்திற்கு சென்று செல்பி எடுத்துள்ளனர். தொடர்ந்து, இருவரும் அங்குள்ள மின்கோபுரத்தின் மீது சாய்ந்தவாறு செல்பி எடுக்க முயன்றனர். அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் உடனடியாக மீட்டு, ஊத்துக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். தொடர்ந்து, தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் இருவரையும் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நேர விரயத்தை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் தடை செய்த பகுதியில் ஆபத்தான முறையில் பயணிக்கும் பொதுமக்கள் ஒருபுறமிருக்க, இதுபோன்ற விளம்பர பிரியர்களால் உயிர்ச் சேதங்களும் ஏற்படுவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர்.