60 ஆண்டுகளாக விவசாயம் செய்யும் நிலத்தை பறிக்க முயற்சி – குறவர் மக்கள் புகார்!

60 ஆண்டுகளாக விவசாயம் செய்யும் நிலத்தை பறிக்க முயற்சி – குறவர் மக்கள் புகார்!

திருச்சி

60 ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் நிலத்தை சிலர் அபகரிக்க முயல்வதாக குறவர் சமூக மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் புகார் அளித்துள்ளார்.

திருச்சி, தூவாக்குடியை அடுத்த தேவராயநேரியில் கடந்த 60 ஆண்டுகளாக குறவர் சமூக மக்கள் வசித்து வருகின்றனர். நரிக்குறவர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு 1966ம் ஆண்டு அவர்கள் வசிப்பதற்கும்,விவசாயம் செய்வதற்கும் சுமார் 120 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கியது. அங்கு விவசாய பணிகளையும் செய்து வருகின்றனர்.

60 ஆண்டுகளாக விவசாயம் செய்யும் நிலத்தை பறிக்க முயற்சி – குறவர் மக்கள் புகார்!

இந்த நிலையில், தற்போது அந்த சுற்று வட்டாரத்தில் வசித்து வரும் மற்ற சமூகத்தினர், ஏரியை புனரமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதையடுத்து தங்களது நிலத்தையும் ஏரியுடன் சேர்க்க முயற்சி செய்வதாக புகார் தெரிவித்து சுமார் 100க்கும் அதிகமான நரிக்குறவ மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

60 ஆண்டுகளாக விவசாயம் செய்யும் நிலத்தை பறிக்க முயற்சி – குறவர் மக்கள் புகார்!

இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், கடந்த 60 ஆண்டுகளாக எங்களுக்கு கொடுக்கப்பட்ட நிலத்தில் விவசாயம் செய்து பிழைத்து வருகிறோம். இப்போது, திடீரென்று மற்ற சமூகத்தினர் கூறுவதை கேட்டு மாவட்ட நிர்வாக அபகரிக்க முயற்சி செய்கிறது. ஏற்கனவே எந்த தொழிலும் இல்லாமல் கடுமையாக எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த நிலத்தையும் எடுத்துக்கொண்டால் நாங்கள் தெருவுக்கு தான் வரவேண்டும். எனவே மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு நாங்கள் விவசாயம் செய்துவரும் நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

60 ஆண்டுகளாக விவசாயம் செய்யும் நிலத்தை பறிக்க முயற்சி – குறவர் மக்கள் புகார்!