கோவையில் வெங்கையா நாயுடுவுக்கு கருப்புக்கொடி காட்ட முயற்சி- நாம் தமிழர் கட்சியினர் கைது

 

கோவையில் வெங்கையா நாயுடுவுக்கு கருப்புக்கொடி காட்ட முயற்சி- நாம் தமிழர் கட்சியினர் கைது

கோவை

கோவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கருப்புகொடி காட்ட முயன்ற நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 14 பேரை போலீசார் கைதுசெய்தனர். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று மாலை விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அவரது வருகையையொட்டி, கோவை அவினாசி சாலை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அவினாசி ரோடு லட்சுமி மில் சந்திப்பு பகுதியில், நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் அணி நிர்வாகி விஜயராகவன் உள்பட 14 பேர், திடீரென கருப்புகொடிகளுடன் வந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் வெங்கையா நாயுடுவுக்கு கருப்புக்கொடி காட்ட முயற்சி- நாம் தமிழர் கட்சியினர் கைது

அப்போது, வேளாண் திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், உடனடியாக அவர்களை மடக்கிப்பிடித்து, குண்டுக்கட்டாக வேனில் ஏற்றினர். தொடர்ந்து, அவர்களை ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். வெங்கையா நாயுடு வருகைக்கு சற்று நேரத்திற்கு முன்பு நடந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தை தொடர்ந்து, நிகழ்ச்சி நடைபெறும் வேளாண் பல்கலைக்கழகம், விருந்தினர் மாளிகை உள்ளிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.