Home இந்தியா குழந்தை பெற்றுக்கொள்ள மனைவி செய்த முயற்சி- சில மணி நேரங்களில் கணவன் மரணம்

குழந்தை பெற்றுக்கொள்ள மனைவி செய்த முயற்சி- சில மணி நேரங்களில் கணவன் மரணம்

தனது கணவன் திடீரென்று கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, கணவன் உயிர் இழந்து விடுவார் என்பதை உறுதி செய்து கொண்ட மனைவி, கணவனின் உயிரணுக்கள் மூலமாக குழந்தை பெற்று விடலாம் என்பதை விரும்பி கணவன் இறப்பதற்கு முன்பு அவரின் உயிரணுக்களை சேகரித்து வைத்துள்ளார்.

குழந்தை பெற்றுக்கொள்ள மனைவி செய்த முயற்சி- சில மணி நேரங்களில் கணவன் மரணம்
குழந்தை பெற்றுக்கொள்ள மனைவி செய்த முயற்சி- சில மணி நேரங்களில் கணவன் மரணம்

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள 32 வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். உடல்நிலை நாளுக்கு நாள் அபாய கட்டத்தில் இருந்ததால் எங்கே தன்னால் கணவன் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விடுமோ என்கிற வேதனையில் இருந்தார். கணவன் இறந்த பிறகு ஆறுதலாக அவர் மூலமாக பெற்ற குழந்தை இருக்கவேண்டும் என்று நினைத்திருந்திருக்கிறார்.

குழந்தை பெற்றுக்கொள்ள மனைவி செய்த முயற்சி- சில மணி நேரங்களில் கணவன் மரணம்

இதையடுத்து கணவரின் உயிரணு மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்திருக்கிறார். இதற்காக முறைப்படி குஜராத் உயர்நீதிமன்றத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் தனது கணவரின் விந்தணுவை சேகரித்து அதன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாக மனுவில் தெரிவித்திருந்தார்.

குழந்தை பெற்றுக்கொள்ள மனைவி செய்த முயற்சி- சில மணி நேரங்களில் கணவன் மரணம்

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் 29 வயதான அப்பெண்ணுக்கு அனுமதி வழங்கியது. முறைப்படி உயிரணுவை சேகரிக்க உத்தரவிட்டது நீதிமன்றம். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. அப்பெண்ணின் கணவரிடம் இருந்து எடுக்கப்பட்ட உயிரணு ஐ.வி.எப், கூடாரத்தில் பத்திரமாக சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இதில் ஒரு கொடுமை என்னவென்றால் உயிரணுக்கள் சேகரிக்கப்பட்ட சில மணி நேரங்களில் கணவன் உயிரிழந்திருக்கிறார்.

குழந்தை பெற்றுக்கொள்ள மனைவி செய்த முயற்சி- சில மணி நேரங்களில் கணவன் மரணம்

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் தேஜஸ்வி யாதவ்

சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுத்த எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கையில் தேஜஸ்வி யாதவ் களம் இறங்கியுள்ளார். சாதி அடிப்படையில் மக்கள்...

வருவாய் அதிகரிப்பு எதிரொலி… பாரத் போர்ஜி் லாபம் ரூ.153 கோடி….

பாரத் போர்ஜ் நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.153 கோடி ஈட்டியுள்ளது. வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான பாரத்...

ஆல்-ரவுண்டராக அசத்திய மேக்ஸ்வெல், ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஹர்ஷல் படேல்! பெங்களூரு அணி அசத்தல் வெற்றி

நடப்பு ஐ.பி.எல் தொடரின் 39-வது லீக் ஆட்டமானது துபாய் சர்வதேச மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும்மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கிடையே நடைபெற்றது.

”எடப்பாடியை கட்சியிலிருந்து நீக்கினால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும்”

எடப்பாடி பழனிச்சாமியை கட்சியிலிருந்து நீக்கினால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும் என அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
TopTamilNews