காதல் திருமணம் செய்த பெண்ணின் பெற்றோர் மீது தாக்குதல்… பஞ்சாயத்தார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை…

 

காதல் திருமணம் செய்த பெண்ணின் பெற்றோர் மீது தாக்குதல்… பஞ்சாயத்தார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை…

திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே காதல் திருமணம் செய்த தம்பதியினரின் பெற்றோரை கிராம பஞ்சாயத்தினர் தாக்கிய சம்வம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புல்லூரை
சேர்ந்தவர் கனகராஜ். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஜெயபிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனிடையே கிராமத்தினை மதிக்காமல் திருமணம் செய்ததாக கூறி பஞ்சாயத்து நிர்வாகிகள் இருவரது குடும்பத்தினரும் 2 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் செலுத்துமாறு தெரிவித்துள்ளனர்.

மேலும் இதற்கு மறுப்பு தெரிவித்ததால் இரு குடும்பத்தினரையும் ஊரை விட்டு ஒதுக்கிவைத்து, அதிமுகவை சேர்ந்த பஞ்சாயத்து நாட்டாமைகள் எல்லப்பன், நாகேஷ் ஆகியோர் கூறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கனகராஜ் அளித்த புகாரின் பேரில், கடந்த நவம்பர் மாதம் போலீசார் அவர்களுடைய குடும்பத்தினருக்கு கிராம பஞ்சாயத்தினர் எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்க கூடாது என்று உத்தரவிட்டனர்.

காதல் திருமணம் செய்த பெண்ணின் பெற்றோர் மீது தாக்குதல்… பஞ்சாயத்தார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை…

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று கிராம கோயிலில் சுவாமி கும்பிட சென்ற ஜெயப்பிரியாவின் தந்தை குமரேசன் மற்றும் அவரது உறவினர்களை கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் தடுத்து நிறுத்தியதுடன், கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த குமரேசன், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தன்னை தாக்கிய பஞ்சாயத்து நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குமரேசன் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, இந்த தாக்குதல் சம்பவம் குறித்து திம்மாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.