இந்தியாவில் தலித் பெண்கள் மீதான தாக்குதல்- ஐநா வேதனை!

 

இந்தியாவில் தலித் பெண்கள் மீதான தாக்குதல்- ஐநா வேதனை!

இந்தியாவில், தலித் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல் வேதனை அளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதே தற்போதைய அவசர தேவை என குறியுள்ளது.

இந்தியாவில் தலித் பெண்கள் மீதான தாக்குதல்- ஐநா வேதனை!

இந்தியாவில் , கடந்த 2018 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக 3,78,236 வழக்குகள் பதிவாகி உள்ளன. இது, 2019ஆம் ஆண்டில் 4 லட்சமாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில், சமீபத்தில் தலித் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமையில் பலியான நிலையில், ஐ.நா அதிகாரிகளிது தொடர்பாக கவலை தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் தலித் பெண்கள் மீதான தாக்குதல்- ஐநா வேதனை!

இந்தியாவில், தலித் பெண்களுக்கு எதிரான குற்றங்களை எடுத்துக் கொண்டால், 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2019-இல் 7.3 சதவீதமும், பழங்குடியின பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 26 சதவீதமும் அதிகரித்துள்ளன. தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பெண்களுக்கு எதிரான வழக்குகளில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 11,829 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஹாத்ரஸ் சம்பவம் தொடர்பாக ஐ. நா. சபை அதிகாரிகள் தங்கள் வருத்தங்களை பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவில் தலித் பெண்கள் மீதான தாக்குதல்- ஐநா வேதனை!