அட்சய திருதியை : தங்கம் வேண்டாம் கல் உப்பு வாங்குங்கள் போதும்!

 

அட்சய திருதியை : தங்கம் வேண்டாம் கல் உப்பு வாங்குங்கள் போதும்!

சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை என்று கொண்டாடப்படுகிறது
குறைவில்லாத செல்வத்தையும், நன்மைகளையும் அளிக்க கூடிய நாள் என்பதால் அட்சய திருதியை என்று சொல்லப்படுகிறது. இந்த நன்னாளில் விலையுயர்ந்த தங்க நகைகளை மக்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்குவார்கள். இதனால் நகைக் கடைகளும் அதிக லாபம் பெறும். அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவோர் வீட்டில் செல்வம் கொழிக்கும் என்று நம்பப்படுகிறது.

அட்சய திருதியை : தங்கம் வேண்டாம் கல் உப்பு வாங்குங்கள் போதும்!

அதேசமயம் தங்கம் வாங்க அனைவராலும் முடியாது என்ற காரணத்தினால் இந்த நாளில் கல் உப்பை வாங்கி வைத்தாலே நம் வீட்டில் குறைவில்லாத செல்வமும், ஐஸ்வர்யமும் பெருகும் என்பது ஐதீகம்.

அட்சய திருதியை நாளில் அதிகாலையில் குளித்துவிட்டு பூஜை அறையில் ஒரு மனை போட்டு அதில் வாழை இலையை பரப்பில் அதில் பச்சரிசி போடுங்கள். அதன்மேல் ஒரு செம்பில் நீர் நிரப்பி மாவிலை மஞ்சள் தடவிய தேங்காயை வைத்து கலசம் ஆக்குங்கள். பின்னர் கலசத்திற்கு பொட்டு பூ வையுங்கள். லக்ஷ்மி நாராயணர் படம் இருந்தால் அதை வைத்து அலங்கரித்து வழிபடலாம். அத்துடன் லஷ்மி குபேர பூஜையில் பாயசம் அல்லது சர்க்கரை கலந்த பால் நைவேத்தியம் வைத்து நீங்கள் விரதம் இருக்கலாம்.

அட்சய திருதியை : தங்கம் வேண்டாம் கல் உப்பு வாங்குங்கள் போதும்!

இந்த நாளில் கல் உப்பை வாங்கி வைத்தாலே போதும் அஷ்டலட்சுமி கடாட்சம் உங்கள் வீடு தேடி வரும் என்று நம்பப்படுகிறது. இந்த நாளில் முதலில் விநாயகரை வணங்கி பின்னர் கலசத்தில் எழுந்தருளியுள்ள மகாலட்சுமியை பிரார்த்தித்தால் உங்களுக்கு குபேரன் அருள் கிடைத்து வாழ்க்கையில் வளமாக வாழலாம்.