கிராமப்புறங்களில் ஏடிஎம் பயன்பாடு அதிகரிப்பு!

 

கிராமப்புறங்களில் ஏடிஎம் பயன்பாடு அதிகரிப்பு!

ஜன் தன் கணக்குகள் மூலம், இந்திய கிராமப்புற ஏடிஎம் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசின் மானியத் திட்டங்களுக்கான பலன்களை மக்களுக்கு நேரடியாக கொண்டு செல்லும் வகையில், ஜன் தன் வங்கிக் கணக்குகளை மத்திய அரசு தொடங்கியது. இதன் மூலம் சுமார் 30 கோடிக்கும் மேற்பட்ட ஜன் தன் கணக்குகள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில், தற்போது கிராமப்புறங்களில் ஏடிஎம் மூலம் பரிவர்த்தனை மற்றும் பயன்பாடுகள் அதிகரித்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் 2 சதவீதமாக இருந்த ஏடிஎம் பயன்பாடு தற்போது 12 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கிராமப்புறங்களில் ஏடிஎம் பயன்பாடு அதிகரிப்பு!

கடந்த 7 ஆண்டுகளில், ஏடிஎம் பயன்பாடு உயர்ந்துள்ளதற்கு, டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது காரணமாகும். முக்கியமாக செப்டம்பர் மாத நிலவரப்படி இந்தியாவில் சுமார் 80 கோடி ஏடிஎம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. இதில், சுமார் 35 சதவீதம் வரை ஜன் தன் கணக்குகளாகும். சுமார் 30 கோடி டெபிட் கார்டுகள் ஜன் தன் கணக்குகளுக்கு வழங்கப்பட்ட ரூபே கார்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கிராமப்புறங்களில் ஏடிஎம் பயன்பாடு அதிகரிப்பு!

கொரொனா தொற்று ஊரடங்கு நாட்களில், மக்கள் நேரடி பண பரிமாற்றங்களை குறைத்துக் கொண்ட நிலையில், ரூபே கார்டுகள் மூலம் பல்வேறு ஆன்லைன் சேவைகளை பெற்றுள்ளனர். ஊரடங்கின்போது எந்த வங்கி ஏடிஎம்களிலும் ரூபே கார்டுகளை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டதால் ஏடிஎம் பயன்பாடு அதிகரித்துள்ளதும் தெரிய வந்துள்ளது.