பல லட்சம் ரூபாய் பணத்துடன் ஏடிஎம் இயந்திரம் கொள்ளை… திருப்பூரில் பரபரப்பு…

 

பல லட்சம் ரூபாய் பணத்துடன் ஏடிஎம் இயந்திரம் கொள்ளை… திருப்பூரில் பரபரப்பு…

திருப்பூர்

திருப்பூரில் பல லட்சம் ரூபாய் பணத்துடன் ஏடிஎம் இயந்திரத்தை மர்மநர்கள் தூக்கிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள சர்கார் பெரியபாளையம் பகுதியில் பரோடா வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. பணம் எடுப்பதற்காக இன்று காலையில் பொதுமக்கள் ஏடிஎம்மிற்கு சென்றபோது, ஏடிஎம் மைய கதவுகள் உடைக்கப்பட்டு, இயந்திரம் மாயமாகி இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் சென்று தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து, கொள்ளை சம்பவம் தொடர்பாக வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதனிடையே, வங்கியில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது, அதிகலை 4.30 மணியளவில் காரில் வந்த 4 பேர் கும்பல் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது.

பல லட்சம் ரூபாய் பணத்துடன் ஏடிஎம் இயந்திரம் கொள்ளை… திருப்பூரில் பரபரப்பு…

மேலும், இயந்திரத்தை உடைக்க முடியாததால் அதனை காரில் தூக்கிச் சென்றுதும் தெரியவந்தது. போலீசாரின் விசாரணையில் கொள்ளைக்கு பயன்படுத்தி காரை, பெருந்துறை அருகே விஜயமங்கலத்தில் விட்டு விட்டு, கொள்ளையர்கள் மாற்று வாகனத்தில் ஏடிஎம் இயந்திரத்தை எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.

இதனிடையே, ஏடிஎம் இயந்திரத்தில் கடந்த 19ஆம் தேதி அன்று 15 லட்சம் ரூபாய் பணம் வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ள வங்கி நிர்வாகம், தற்போது அதில் 2. 5 லட்சம் ரூபாய் வரை பணம் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.