ஏடிஎம் 3வது கொள்ளையனுக்கு 13ஆம் தேதி வரை சிறை!

 

ஏடிஎம் 3வது கொள்ளையனுக்கு 13ஆம் தேதி வரை சிறை!

சென்னையில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் வடமாநிலத்தை சேர்ந்த சிலர் பல லட்சம் ரூபாயை கடந்த சில மாதங்களாக கொள்ளையடித்து வந்துள்ளனர்.எஸ்பிஐ வங்கியின் பணம் டெபாசிட் செய்யும் ஏடிஎம்கள் உள்ள இடங்களை கண்டறிந்து கொள்ளையடித்த கும்பல் சூளைமேடு, பாண்டிபஜார், ராமாபுரம் ,வடபழனி, வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், ஹரியானாவில் அமீர் , வீரேந்தர் என இருவர் கைது செய்யப்பட்டனர். கைதான நபர்களிடமிருந்து 3 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் ,அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.

ஏடிஎம் 3வது கொள்ளையனுக்கு 13ஆம் தேதி வரை சிறை!

இதையடுத்து நஜீம் உசேன் என்ற 3வது கொள்ளையனை கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீசார் சுற்றி வளைத்தனர். ஹரியானாவில் பிடிபட்ட ஏ.டி.எம். கொள்ளையன் வீரேந்தர் நீதிமன்ற காவலில் சென்னை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் நஜீம் உசேன் விமானம் மூலம் ஹரியானாவிலிருந்து சென்னை அழைத்து வரப்பட்டார்.

ஏடிஎம் 3வது கொள்ளையனுக்கு 13ஆம் தேதி வரை சிறை!

நஜீம் உசேன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்குட்படுத்திய போலீசார் பின் நீதிபதி சகானா முன் நஜீம் உசேனை ஆஜர்படுத்தினர். பின்னர் நஜீம் உசேனை ஜூலை 13ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி சகானா உத்தரவிட்டார். கொள்ளை வழக்கில் கைதான இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை திட்டமீட்டுள்ளனர்.