atk mohun bagan அணி முதல் இடத்திற்கு முன்னேறுமா? – ISL கால்பந்து திருவிழா

 

atk mohun bagan அணி முதல் இடத்திற்கு முன்னேறுமா? – ISL கால்பந்து திருவிழா

ISL போட்டிகள் கால்பந்து ரசிகர்களுக்கு தினமும் சுவாரஸ்யமான போட்டிகளை அளித்து வருகிறது. நேற்றையை போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது ஈஸ்ட் பெங்கலால். விறுவிறுப்பான போட்டியில் 3:2 எனும் கோல் கணக்கில் ஹைதராபாத் வென்றது.

இன்றைய போட்டி atk mohun bagan அணிக்கும் கோவா அணிக்கும் இடையே இரவு 7:30 மணிக்கு கோவா ஃபாடொரிடா மைதானத்தில் நடைபெறுகிறது. atk mohun bagan அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி, 3 போட்டிகளில் வென்று, ஒன்றில் தோல்வி, ஒன்றை டிராவாக்கி, 10 புள்ளிகளோடு பாயிண்ட் டேபிளில் 3 -ம் இடத்தில் உள்ளது.

atk mohun bagan அணி முதல் இடத்திற்கு முன்னேறுமா? – ISL கால்பந்து திருவிழா

கோவா அணி, 5 போட்டிகளில் ஆடி, 2 ல் வென்றும் 2-ல் டிராவாகி, 1-ல் தோற்றும் 8 புள்ளிகளோடு 6-ம் இடத்தில் உள்ளது. நேற்று 6- இடத்தில் ஜாம்ஷெட்பூர் அணி இருந்தது. நேற்றைய போட்டியில் ஹைதராபாத் வென்றதால் முன்னேறி வந்ததால் பட்டியலில் மாற்றம் கண்டுள்ளது.

மும்பை சிட்டி அணி 13 புள்ளிகளோடு முதல் இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் இன்று atk mohun bagan அணி வெல்லும் பட்சத்தில் முதல் இடத்திற்கு முன்னேறவும் வாய்ப்பிருக்கிறது. இல்லையெனினும், இரண்டாம் இடத்திலாவது இருக்கும்.

atk mohun bagan அணி முதல் இடத்திற்கு முன்னேறுமா? – ISL கால்பந்து திருவிழா

கோவா அணி வெல்லும்பட்சத்தில் 2 – 4 இடங்களில் இடம்பெற வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை டிராவாகி போனாலும் கோவா ஓர் இடம் முன்னேற வாய்ப்பிருக்கிறது.