• August
    24
    Saturday

Main Area

Main



அத்திவரதர் தரிசனம் | மகனையும், கணவரையும் பறிகொடுத்த பெண் கதறல்

கார்
கார்
Loading...
suburaj wife

திருப்பூர் மாவட்டம் சிறுபூலப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்புராஜ். இவர் தனது 3 வயது குழந்தை விவன் மற்றும் மனைவி கிருத்திகா ஆகியோருடன் அத்திவரதரை தரிசிக்க சொகுசு காரில் காஞ்சிபுரம் புறப்பட்டார். சுப்புராஜின் நண்பர் மகேந்திரன் என்பவரும், அவரது மனைவி மற்றும் குழந்தையும் இவர்களுடன் அதே காரில் பயணித்தனர். காரை, சுப்புராஜின் மனைவி கிருத்திகா ஓட்டியதாகக் கூறப்படுகிறது. 

suburaj

தருமபுரியை அடுத்த சேசம்பட்டி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதியது. மோதிய வேகத்தில் சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் இரு முறை உருண்டு தலைக்குப்புறக் கவிழ்ந்தது. இந்த விபத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த விபத்தில் சிறுவன் விவன் மற்றும் அவனது தந்தை சுப்புராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற நான்கு பேரும் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

accident

அப்போது தனது மகனின் சடலத்தை மடியில் வைத்துக் கொண்டு கணவரின் சடலத்தைக் கண்டு கிருத்திகா கதறி அழுதது காண்போரைக் கலங்கச் செய்தது. வெளியில் அழைத்துச் செல்லும் போதும் கதறியபடியே சென்ற அந்தப் பெண், கணவரையும் குழந்தையையும் நினைத்து அழுது புலம்பினார். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2018 TopTamilNews. All rights reserved.