darbar
  • January
    28
    Tuesday

Main Area

Main



நின்ற கோலத்தில் நாளை முதல் காட்சியளிக்கிறார் அத்தி வரதர்!

அத்தி வரதர்
அத்தி வரதர்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அத்தி வரதர் நாளை முதல் நின்ற கோலத்தில் காட்சியளிக்க உள்ளதால்  அதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அத்தி வரதர் விழா கடந்த 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அத்தி வரதரைத் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். அத்தி வரதர் திருவிழா தொடங்கி ஒருமாத காலம் இன்றுடன் முடிவடைகிறது. 

athivaradhar

இந்நிலையில் நாளை முதல் (ஆகஸ்ட் 1)  அத்தி வரதர் நின்ற கோலத்தில் எழுந்தருள இருப்பதால், அன்றிலிருந்து பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த அம்மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. நாளை அத்தி வரதர்  ஏற்பாடுகளைச் செய்ய வசதியாக இன்று தரிசன நேரம் குறைக்கப்பட்டுள்ளது. பொது தரிசனத்திற்கான நுழைவு வாயில் நண்பகல் 12 மணிக்கு மூடப்பட்டு, கோயில் வளாகத்தில் இருக்கக்கூடிய பக்தர்கள் மாலை 5 மணி வரை மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்றும் விஐபி தரிசனம் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

athivaradhar

நாளை முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை, வழக்கம்போல் காலை 5 மணியிலிருந்து அத்தி வரதரைத் தரிசிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.