சாலையில் கவனத்தை ஈர்க்கும் ஏத்தர் மின்சார ஸ்கூட்டர்!

 

சாலையில் கவனத்தை ஈர்க்கும் ஏத்தர் மின்சார ஸ்கூட்டர்!

இந்தியாவில் மின்சார வாகன பயன்பாட்டை அரசு ஊக்குவித்து வரும் நிலையில், இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் மின்சார வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், பெங்களூருவைச் சேர்ந்த ஏத்தர் நிறுவனம் வெளியிட்டுள்ள மின்சார ஸ்கூட்டர் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

சாலையில் கவனத்தை ஈர்க்கும் ஏத்தர் மின்சார ஸ்கூட்டர்!

ஸ்டைலான லுக்
சென்னையில், அதற்கென பிரத்யேக விற்பனையகம் திறக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மின்சார ஸ்கூட்டரின் சிறப்பம்சங்களை நேரில் கேட்டும், கண்டறிந்தும் வாசகர்களுக்கு அளிக்கிறோம்.
பார்ப்பதற்கு மிகச் சிறந்த வடிவமைப்பும், கண்டதும் ஈர்க்கும் வகையிலும் உள்ளது முதன்மையாக குறிப்பிட்டலாம். வழக்கமான ஸ்கூட்டர் டைப்பில் இருந்தாலும், வண்டியை ஆன் செய்ததும் லுக்கான மானிட்டர் அனைத்துக்கும் வழிகாட்டுகிறது.

சைட் ஸ்டாண்ட்
நார்மல் ஸ்கூட்டர்போல, பிரேக் பிடித்துக்கொண்டே கிளட்சை அழுத்தினால் வண்டி ஆன் ஆகிவிடும். வண்டி குறித்த அனைத்து ஸ்பெசிபிகேஷனும் மானிட்டர் காட்டி விடும். குறிப்பாக வண்டியின் சைட் ஸ்டான்ட் எடுக்க வேண்டும் என காட்டும். சைட் ஸ்டாண்ட் எடுத்தால்தான் வண்டியர் கியர் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

நான்கு மோடு

ஓட்டுவதற்கு நான்கு விதமான மோடு இருக்கிறது. ஸ்போர்ட்ஸ், ஈக்கோ என தேவைக்கு ஏற்ப வண்டி ஓடிக்கொண்டிருக்கும் போதே செலக்ட் செய்து கொள்ளலாம். போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ப, இந்த மோடு களை தேர்வு செய்யலாம்.

சாலையில் கவனத்தை ஈர்க்கும் ஏத்தர் மின்சார ஸ்கூட்டர்!


வண்டியை ரிவர்ஸ் எடுப்பதற்கானவசதியும் உள்ளது. மானிட்டரில் ரிவர்ஸ் என்கிற ஆப்ஷனை தேர்வு செய்து விட்டு ரிவர்ஸ் எடுத்துக் கொள்ளலாம். கூகுள் நேவிகேஷன் இருப்பதால், நமக்கு பேவரைட்டான இடங்களை முன்கூட்டியே தேர்வு செய்து வைத்துக் கொள்ள முடியும். இந்த வண்டிக்கான சார்ஜிங் ஸ்டேஷன் குறித்த இடங்கள் குறித்த விவரங்களும் அதில் இருக்கிறது. தேவைக்கேற்ப அவ்வப்போது சாப்ட்வேர் அப்டேட் ஆகும் வகையில் உள்ளது. மானிட்டரும் லைட் அண்ட் டார்க் என 2 ஆப்ஷன் உள்ளது. தேவைக்கு ஏற்ப ஆட்டோமேட்டிக்கான அந்த மோட் செலக்ட் ஆகும். வண்டியில் ஏதேனும் பிரச்சனை என்றாலும் மானிட்டர் இண்டிகேட் செய்து விடும்.

சாலையில் கவனத்தை ஈர்க்கும் ஏத்தர் மின்சார ஸ்கூட்டர்!

என்னென்ன கோளாறுகள் இருக்கிறது என்பதை செக் செய்து மானிட்டர் ரெக்கார்ட் செய்து கொள்ளும். அந்த விவரங்களை ஆப் மூலம் அனுப்பினால் ஏத்தர் நிறுவன சர்வீஸ் என்ஜினியர்கள் வந்து சரி செய்து தருவார்கள்.

மிதக்கும் ரைடிங்
வாகனம் சாலையில் செல்லும் பொழுது மிகவும் சுமூகமான ரைடிங் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சாதாரணமாக 80 கிலோ மீட்டர் வேகம் வரை செல்ல முடியும். 3.3 செகண்டில் 40 கிலோமீட்டர் வேகத்தை எட்டி விடுகிறது.


21,700 லித்தியம் அயன் பேட்டரி இதில் பயன்படுத்தப்படுகிறது. இதனுடைய மொத்த விலை சென்னையில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயாகும். 30 ஆயிரம் கொடுத்து பைக் வாங்கிட்டு, தவணையில் செலுத்தும் வசதியும் உள்ளது. மூன்றாண்டுகளுக்குப் பிறகு பயன்படுத்திய பைக்கை திருப்பி கொடுத்து முதலில் கொடுத்த 30 ஆயிரம் ரூபாய் திரும்ப பெறும் வசதியும் உள்ளது.

நகர வாழ்க்கையில் ஏற்கெனவே சுற்றுச்சூழல் மாசுடன் வாழும் மக்கள், தங்கள் உடல்நலனை காக்க மட்டுமல்ல, சமூக நலனை காக்கவும் சூழலியல் வாகனங்களுக்கு மாற வேண்டிய நேரம் இது. இதற்கு ஏற்றதாக ஏத்தர் ஸ்கூட்டர் உள்ளது.

இதற்கான வீடியோ இணைப்பைக் காண..