கரந்தை நெல் கொள்முதல் நிலையத்தில், தஞ்சை ஆட்சியர் ஆய்வு

 

கரந்தை நெல் கொள்முதல் நிலையத்தில், தஞ்சை ஆட்சியர் ஆய்வு

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் கரந்தை பூக்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை, மாவட்ட ஆட்சியர் கோவிந்தா ராவ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, கொள்முதல் நிலையத்தில் இதுவரை கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல்லின் அளவு குறித்தும், அதில் பயனடைந்தவர்களின் விபரங்களையும் ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.

கரந்தை நெல் கொள்முதல் நிலையத்தில், தஞ்சை ஆட்சியர் ஆய்வு

தொடர்ந்து, கொள்முதல் நிலையத்தில் தேவையான அளவு சாக்கு மற்றும் சனல் ஆகியவற்றை கையிருப்பு வைத்துக்கொள்ள அறிவுறுத்திய ஆட்சியர் கோவிந்த ராவ், கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை உடனுக்குடன் லாரிகள் மூலம் ஏற்றிவிடவும், தாமதமின்றி கொள்முதல் பணிநடை பெறுவதை உறுதிசெய்திட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், மழையினால் நெல் மூட்டைகள் சேதம் அடையாமல் இருக்க தேவையான தார்பாலின் தயார் நிலையில் வைத்திடவும் அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய அதிகாரிகள் தாமதம் செய்து வருவதாக கரந்தை பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்திருந்த நிலையில், ஆட்சியர் திடீர் ஆய்வுமேற்கொண்டது குறிப்படத்தக்கது.