இடா புயல்: வரலாறு காணாத கடும் வெள்ளம்; 41 பேர் பலி!

 

இடா புயல்: வரலாறு காணாத கடும் வெள்ளம்; 41 பேர் பலி!

இடா புயல் காரணமாக அமெரிக்காவின் நியூயார்க் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இத்வரை 41 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இடா புயல்: வரலாறு காணாத கடும் வெள்ளம்; 41 பேர் பலி!

அமெரிக்காவின் பல மாநிலங்களை இடா சூறாவளி தற்போது புரட்டிப் போட்டுள்ளது. இதனால் அங்கு கடுமையான மழை பொழிவு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு உண்டாகியுள்ளது. சூறாவளி காரணமாக பெய்த கன மழையால் பல நகரங்களின் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. லூயிசியானா, மிஸ்ஸிசிப்பியில் உள்ளிட்ட பகுதிகள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன, அதேபோல் கடலோர மாவட்டங்கள், ஜீன் லேஃபிட், லெயர் லேஃபிட் உள்ளிட்ட சிறிய நகரங்கள் இடா சூறாவளியால் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளன.

இடா புயல்: வரலாறு காணாத கடும் வெள்ளம்; 41 பேர் பலி!

இந்நிலையில் இடா புயல் காரணமாக அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூஜெர்சி நகரங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருவதால் அங்கு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர்.புயல், கனமழை, வெள்ளப்பெருக்கு என இடா புயலால் நியூயார்க் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்துள்ள நிலையில் அங்கு அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இடா புயல்: வரலாறு காணாத கடும் வெள்ளம்; 41 பேர் பலி!

குறிப்பாக நியூயார்க் நகரில் சுரங்கப் பாதைக்குள் வெள்ளப்பெருக்கு, வெள்ளப்பெருக்கு மத்தியில் ரயில் சேவை உள்ளிட்ட காட்சிகள் நெஞ்சை பதற வைக்கிறது. அத்துடன் பல இடங்களிலும், சுரங்க பகுதிகளில் மக்கள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்களை மீட்கும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ரயில்சேவை, விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. நியூயார்க், கனெக்டிகட், நியூ ஜெர்சி ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நியூ ஜெர்சியில் 60 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.