மார்ச் 31ம் தேதிக்குள் ஆதாருடன் இணைக்காவிட்டால் 18 கோடி பான் கார்டுகள் ரத்தாக வாய்ப்பு… வருமான வரித்துறை

மார்ச் 31ம் தேதிக்குள் ஆதாருடன் இணைக்காவிட்டால் 18 கோடி பான் கார்டுகள் ரத்தாக வாய்ப்பு… வருமான வரித்துறை

நம் நாட்டின் மக்கள் தொகை 130 கோடி என்ற அளவில் உள்ளது. இருப்பினும் எவ்வளவு பேர் வருமான வரி செலுக்கிறார்கள் என்று பார்த்தால் நமக்கு அதிர்ச்சிதான் ஏற்படும். வெறும் 1.5 கோடி பேர் மட்டுமே. இன்னும் தெளிவாக சொல்வது என்றால், கடந்த ஜூன் நிலவரப்படி, நம் நாட்டில் 50.95 கோடி பேரிடம் பான் கார்டு உள்ளது. அவர்களில் 6.48 கோடி பேர் மட்டுமே வருமான வரி கணக்கை தாக்கல் செய்கின்றனர். அவர்களில் 1.5 கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்துகின்றனர்.

மார்ச் 31ம் தேதிக்குள் ஆதாருடன் இணைக்காவிட்டால் 18 கோடி பான் கார்டுகள் ரத்தாக வாய்ப்பு… வருமான வரித்துறை

எஞ்சிய 4.98 கோடி பேர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்தாலும், தாங்கள் வரி செலுத்த வேண்டியது இல்லை என அவர்கள் கணக்கு காட்டுகின்றனர் என வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மற்றொரு வருமான வரித்துறை அதிகாரி கூறுகையில், வரி விதிப்பிலிருந்து தப்பிக்க, சிலர் தங்களது அதிக மதிப்பிலான பரிவர்த்தனைகளை மறைக்க பல பான் எண்களை பயன்படுத்துகின்றனர். இதன் விளைவாக, இதுவரை 32.71 கோடி பான் எண்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. மார்ச் 31க்கு முன்னர் ஆதாருடன் இணைக்கப்படாவிட்டால் 3ல் 1 பங்கு பான் எண்கள் கண்காணிப்பின்கீழ் இருக்கும் என தெரிவித்தார். பல பான் எண்களை பயன்படுத்தும், அதிக மதிப்புடைய வரிவர்த்தனைகளை நடத்தும் வரி ஏய்ப்பவர்களை தடுக்க வருமான வரித்துறையில் செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்டுள்ளது.

மார்ச் 31ம் தேதிக்குள் ஆதாருடன் இணைக்காவிட்டால் 18 கோடி பான் கார்டுகள் ரத்தாக வாய்ப்பு… வருமான வரித்துறை

ஆலோசனை நிறுவனமான டாக்ஸ்மேனின் துணை பொது மேலாளர் நவின் வாத்வா கூறுகையில், பான் ஆதாருடன் இணைக்கவில்லை என்றால் பல பான் எண்களை பெறுவதற்காக வாய்ப்புகள் உள்ளது. ஒருமுறை பான் எண்ணை ஆதாருடன் இணைத்து விட்டால் பல பான் எண்களை பெற வாய்ப்புகள் இல்லை. பான் மற்றும் ஆதார் இணைப்பு வரி ஏய்ப்பு செய்பவர்களை பிடிக்க வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு உதவும் என தெரிவித்தார்.