பா.ஜ.க-வுடன் நட்பு என நிரூபித்தால் கட்சியை விட்டு விலகத் தயார்! – ராகுல் பேச்சுக்கு குலாம் நபி ஆசாத் எதிர்ப்பு

பா.ஜ.க-வுடன் நட்பு என நிரூபித்தால் கட்சியை விட்டு விலகத் தயார்! – ராகுல் பேச்சுக்கு குலாம் நபி ஆசாத் எதிர்ப்பு

தனக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் கூட்டு, தொடர்பு இருப்பதை நிரூபித்தால் கட்சியை விட்டு வெளியேறத் தயார் என்று ராகுல் காந்தியின் கருத்துக்கு குலாம் நபி ஆசாத் பதிலடி கொடுத்துள்ளார்.

பா.ஜ.க-வுடன் நட்பு என நிரூபித்தால் கட்சியை விட்டு விலகத் தயார்! – ராகுல் பேச்சுக்கு குலாம் நபி ஆசாத் எதிர்ப்பு

காங்கிரஸ் கட்சியின் தற்காலிகத் தலைவராக சோனியா காந்தி உள்ளார். கட்சிக்கு நிரந்தர தலைவர் வேண்டும் என்று குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் கடிதம் எழுதியிருந்தனர். இதைத் தொடர்ந்து இடைக்காலத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக சோனியா காந்தி அறிவித்தார். இன்று இது தொடர்பாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் கூடி ஆலோசனை நடத்தி வருகிறது
இந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தற்போது தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்த தலைவர்களுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் தொடர்பு உள்ளது என்று கூறினார். இது கட்சித் தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க-வுடன் நட்பு என நிரூபித்தால் கட்சியை விட்டு விலகத் தயார்! – ராகுல் பேச்சுக்கு குலாம் நபி ஆசாத் எதிர்ப்பு

இது குறித்து கடிதம் எழுதிய தலைவர்களுள் ஒருவரான குலாம் நபி ஆசாத் பேசும்போது, “தனக்கு பா.ஜ.க-வுடன் தொடர்பு உள்ளது என்பதை நிரூபித்தால் கட்சியை விட்டு வெளியேறத் தயார்” என்று கூறினார்.

பா.ஜ.க-வுடன் நட்பு என நிரூபித்தால் கட்சியை விட்டு விலகத் தயார்! – ராகுல் பேச்சுக்கு குலாம் நபி ஆசாத் எதிர்ப்பு

இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலேயே விளக்கம் அளித்துள்ளார். அதில், ராகுல் காந்தி எங்களுக்கு பா.ஜ.க-வுடன் தொடர்பு உள்ளது என்று கூறியுள்ளார்.

ராஜஸ்தான் நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்காக வாதாடி வெற்றி பெற்றோம். மணிப்பூரில் பா.ஜ.க ஆட்சிக்கு எதிராக வாதாடினோம். கடந்த 30 ஆண்டுகளில் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக எந்த ஒரு அறிக்கையும் வெளியிட்டது இல்லை ஆனாலும் நாங்கள் பாரதிய ஜனதாவுடன் தொடர்பில் உள்ளோம்” என்று மன வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.