கடனில் தள்ளாடும் தெலங்கானா அரசு.. ரூ.30 லட்சம் மதிப்பில் அதிகாரிகளுக்கு கார்.. முதல்வரை சந்திரசேகர் ராவை சாடிய பா.ஜ.க.

கடனில் தள்ளாடும் தெலங்கானா அரசு.. ரூ.30 லட்சம் மதிப்பில் அதிகாரிகளுக்கு கார்.. முதல்வரை சந்திரசேகர் ராவை சாடிய பா.ஜ.க.

தெலங்கானா கடன் சுமையால் நெருக்கடியை சந்தித்து வரும் வேளையில், அதிகாரிகளுக்காக விலை உயர்ந்த சொகுசு கார்களை அம்மாநில அரசு வாங்கியதை பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.

தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையில் டி.ஆர்.எஸ். ஆட்சி நடைபெற்று வருகிறது. தெலங்கானா அரசுக்கு சுமார் ரூ.40 ஆயிரம் கோடி கடன் உள்ளது. இந்த சூழ்நிலையில், தொற்று கால போனசாக 32 கூடுதல் மாவட்ட ஆட்சியர்களுக்காக தெலங்கானா அரசு மிகவும் விலையுயர்ந்த கார்னிவால் கார்கள் 32 வாங்கியுள்ளது. ஒரு கார்னிவால் காரின் மதிப்பு சுமார் ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை இருக்கும்.

கடனில் தள்ளாடும் தெலங்கானா அரசு.. ரூ.30 லட்சம் மதிப்பில் அதிகாரிகளுக்கு கார்.. முதல்வரை சந்திரசேகர் ராவை சாடிய பா.ஜ.க.
காரை பார்வையிடும் முதல்வர் சந்திரசேகர் ராவ்

ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் முதல்வரின் இல்லமான பிரகதி பவனில் மாநில தலைமை செயலாளர் சோமேஷ் குமார் மற்றும் பிற அதிகாரிகள் முன்னிலையில் அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் புவாடா அஜய் குமார் கார்னிவால் கார்களை தொடங்கி வைத்தார். தெலங்கானா கடனில் சிக்கி தவிக்கும் வேளையில் அதிகாரிகளுக்கு விலையுயர்ந்த கார்களை மாநில அரசு வாங்கியதை பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.

கடனில் தள்ளாடும் தெலங்கானா அரசு.. ரூ.30 லட்சம் மதிப்பில் அதிகாரிகளுக்கு கார்.. முதல்வரை சந்திரசேகர் ராவை சாடிய பா.ஜ.க.
பா.ஜ.க.

தெலங்கானா பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் கிருஷ்ணா சாகர் ராவ் இது தொடர்பாக கூறியதாவது: 32 அதி சொகுசு கார்களை வாங்க ரூ.11 கோடிக்கு மெலம் செலவழித்ததை முதல்வர் சந்திரசேகர் ராவ் எப்படி நியாயப்படுத்த முடியும்? முதல்வர் ஒரு அபாயகரமான தொற்றுநோய்க்கு மத்தியில் பொதுமக்களின் பணத்தை வீணடிக்கிறார். அதேநேரத்தில் பல ஏழை மக்கள் கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதால் கடன் சுமையால் இறந்து கொண்டு இருக்கின்றனர். இந்த முடிவு (அதிகாரிகளுக்கு விலையுயர்ந்த கார்) கொடூரமானது மற்றும் சிந்திக்க முடியாதது. இந்த முடிவை தெலங்கானா அரசு திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி விலையுயர்ந்த கார்கள் வாங்கியதை பொறுப்பற்ற தன்மை என்று குற்றம் சாட்டியது.