இந்தியாவில் கடந்த 45 நாட்களாக இல்லாத அளவு குறைந்த கொரோனா!

 

இந்தியாவில் கடந்த 45 நாட்களாக இல்லாத அளவு குறைந்த கொரோனா!

இந்தியாவில் 2வது நாளாக 2லட்சத்துக்கும் கீழ் கொரோனா பாதிப்பு குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. காரணம் இங்கு பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அத்துடன் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்தியாவில் கடந்த 45 நாட்களாக இல்லாத அளவு குறைந்த கொரோனா!

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1.73 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் 2வது நாளாக 2லட்சத்துக்கும் கீழ் கொரோனா பாதிப்பு குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2,75,55,457லிருந்து 2,77,29,247 ஆக அதிகரித்துள்ளது. நேற்றுமுன்தினம் 2.11 லட்சம், நேற்று 1.86 லட்சம் இருந்த பாதிப்பு இன்று 1.73 லட்சமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 3617 பேர் இறந்த நிலையில் இதுவரை கொரோனாவால் 3,22,512 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 45 நாட்களாக இல்லாத அளவு குறைந்த கொரோனா!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் கடந்த 24 மணிநேரத்தில் 2.84 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.கடந்த 45 நாட்களில் இல்லாத அளவாக தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,48,93,410 லிருந்து 2,51,78,011 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 22,28,724 ஆக குறைந்துள்ளது.