’வலி குறைந்துவிட்டது’ காயத்திலிருந்து மீண்டு வரும் அஸ்வின்

 

’வலி குறைந்துவிட்டது’ காயத்திலிருந்து மீண்டு வரும் அஸ்வின்

ஐபிஎல் தொடரில் இரண்டாம்  போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதிக்கொண்டன.

அப்போது பந்து வீசிய தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், அந்த ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுவும் முன்னணி வீரர்களான கருண் நாயர் மற்றும் நிக்கோலஸ் பூரண் ஆகியோரின் விக்கெட்டுகள். இதுவே ஆட்டத்தை டெல்லி அணி பக்கம் திருப்பியது.

’வலி குறைந்துவிட்டது’ காயத்திலிருந்து மீண்டு வரும் அஸ்வின்

ஆனால், கடைசி பந்தில் மேக்ஸ்வெல் அடித்த பந்தைத் தடுக்கப் பாய்ந்தவர், கீழே விழுந்துவிட்டார். தோள்பட்டையில் கடும் வலி என ஓய்வெடுக்க அழைத்துச் சென்றுவிட்டனர்.

அதன்பிறகு அஸ்வினுக்கு என்ன ஆனது என்ற தகவல் தெரியவில்லை. அஸ்வினுக்குத் தோள்பட்டையில் கடும் காயம் ஏற்பட்டுள்ளது. மூன்று முதல் நான்கு வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் போன்ற உறுதிச்செய்யப்படாத செய்திகள் வந்தன. இதில் எதையும் டெல்லி அணி தரப்பில் உறுதி செய்யப்பட வில்லை.

’வலி குறைந்துவிட்டது’ காயத்திலிருந்து மீண்டு வரும் அஸ்வின்

அஸ்வின் பற்றி டெல்லி கேப்பிட்டஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் சொல்லும்போது, ‘அஸ்வினின் ஓவரே ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்பியது. அவரின் காயம் குறித்து பிஸியோதெரப்பிஸ்ட்தான் கூற வேண்டும்’ என்றார்.

இந்நிலையில் அஸ்வின் தனது காயம் குறித்து ட்விட் செய்துள்ளார். ’போட்டியிலிருந்து நேற்று இரவு வெளியேறும்போது வலி இருந்தது. ஆனால், இப்போது வலி குறைந்து விட்டது. எடுக்கப்பட்ட ஸ்கேன் முடிவுகள் நம்பிக்கை அளிக்கும் விதமகவே உள்ளது. உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார். ஆர்.சி.பி அணியில் அறிமுக போட்டியிலேயே அரை சதம் அடித்த படிக்கல்லுக்கு கைதட்டி வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார்.

இதன் மூலம் விரைவில் அஸ்வினின் சுழற்பந்து மேஜிக்கை மைதானத்தில் பார்க்கலாம் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு வந்துள்ளது.