அஸ்வின் காயம்… ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுகிறாரா? #IPL #Ashwin

 

அஸ்வின் காயம்… ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுகிறாரா? #IPL #Ashwin

ஐபிஎல் திருவிழா தொடங்கி உற்சாகமாகப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சென்று நடந்த

நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதிக்கொண்டன.

அஸ்வின் காயம்… ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுகிறாரா? #IPL #Ashwin

முதலில் ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் மார்கஸ் ஸ்டொயின்ஸ் பிரமாதமாக ஆடி, 157 ரன்கள் எடுக்க வைத்தார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் முகம்மது ஷமி அற்புதமாகப் பந்து வீசி  3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து ஆடிய பஞ்சாப் அணியில் கே.எல். ராகுலும் மயங் அகர்வாலும் நிதானமாக ஆடினார்கள். விக்கெட்டுகளை இழந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தோடு ஆடினார்கள்.

அஸ்வின் காயம்… ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுகிறாரா? #IPL #Ashwin

ஆறாவது ஓவரை வீச வந்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். ஐக்கிய அமீரக மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றவை என்பதற்கு பொருத்தமாக, அந்த ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுவும் முன்னணி வீரர்களான கருண் நாயர் மற்றும் நிக்கோலஸ் பூரண் ஆகியோரின் விக்கெட்டுகள். இதுவே ஆட்டத்தை டெல்லி அணி பக்கம் திருப்பியது.

ஆனால், கடைசி பந்தில் மேக்ஸ்வெல் அடித்த பந்தைத் தடுக்கப் பாய்ந்தவர், கீழே விழுந்துவிட்டார். தோள்பட்டையில் கடும் வலி என ஓய்வெடுக்க அழைத்துச் சென்றுவிட்டனர்.

அஸ்வின் காயம்… ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுகிறாரா? #IPL #Ashwin

அதன்பிறகு அஸ்வினுக்கு என்ன ஆனது என்ற தகவல் தெரியவில்லை. அஸ்வினுக்குத் தோள்பட்டையில் கடும் காயம் ஏற்பட்டுள்ளது. மூன்று முதல் நான்கு வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும். அதனால் ஐபிஎல் போட்டியில் நீடிப்பது சந்தேகமே என்பது போன்ற உறுதிச்செய்யப்படாத செய்திகள் வந்தன. இதில் எதையும் டெல்லி அணி தரப்பில் உறுதி செய்யப்பட வில்லை.

அஸ்வின் பற்றி டெல்லி கேப்பிட்டஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் சொல்லும்போது, ‘அஸ்வினின் ஓவரே ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்பியது. அவரின் காயம் குறித்து பிஸியோதெரப்பிஸ்ட்தான் கூற வேண்டும்’ என்றார்.

அஸ்வின் பற்றிய வதந்திகள் அதிகரிப்பதற்கு முன், டெல்லி கேப்பிடல்ஸ் அணியினர் சரியான தகவல்களைத் தெரிவிப்பதே சரியாக இருக்கும்.