24-11-2021 தினப்பலன்: மகிழ்ச்சியான நாளாக இருக்கும்!

 
Astrology Red 2

பிலவ ஆண்டு I கார்த்திகை 8 I புதன்கிழமை I நவம்பர் 24, 2021

இன்றைய ராசி பலன்!

24-5-2021 தினப்பலன் – பலன்கள் நிறைந்த நாளாக அமையுமா?

மேஷம்

சிறப்பான நாளாக இருக்கும். உங்களின் உள் ஆற்றலை உணர்வீர்கள். இலக்குகளை நிர்ணயித்துச் செயல்பட்டால் வெற்றி பெறுவீர்கள். வேலை சூழல் சவால் நிறைந்ததாக இருக்கும். நம்பிக்கையுடன் பணியை செய்யுங்கள் நல்லதே நடக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.

13-05-2021 தினப்பலன் –

ரிஷபம்

நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆன்மிகம், பொழுதுபோக்கில் ஈடுபடுவது மனதுக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் பெற்றுத் தரும். வேலை சூழல் போராட்டம் மிகுந்ததாக இருக்கும். பணியில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் மோதல் போக்கு நிலவும். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். செலவுகள் அதிகமாக இருக்கும். பணப் பற்றாக்குறை ஏற்படும்.

13-05-2021 தினப்பலன் –

மிதுனம்

போராட்டமான நாளாக இருக்கும். நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். வேலைப் பளு அதிகரிக்கும். கடின முயற்சிகள் செய்து வேலையை முடிக்க வேண்டிய சூழல் இருக்கும். குடும்பத்தில் அதிருப்தி காணப்படும். கணவன் மனைவி இடையே மோதல் ஏற்படலாம். பணப் பற்றாக்குறை காணப்படும். செலவுகள் அதிகமாக இருக்கும்.

13-05-2021 தினப்பலன் –

கடகம்

சுமாரான நாளாக இருக்கும். விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். வேலை சூழல் கடினமாக இருக்கும். உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். இதனால் வேலையை விரைவாக முடிப்பீர்கள். குடும்பத்தில் அதீத உணர்ச்சிப் பெருக்கான சூழல் காணப்படும். நட்புறவுடன் பழகுவதன் மூலம் வாழ்க்கைத் துணைவரின் அன்பைப் பெறலாம். பண இழப்புக்கு வாய்ப்பு உள்ளது.

13-05-2021 தினப்பலன் –

சிம்மம்

அனுகூலமான நாளாக இருக்கும். முயன்றால் வெற்றி பெறுவீர்கள். லாபமான நாளாக அமையும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பும் உயர் அதிகாரியின் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் புரிந்துணர்வு காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. குடும்பத் தேவையை நிறைவேற்றச் செலவு செய்வீர்கள்.

13-05-2021 தினப்பலன் –

கன்னி

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். இன்றைய நாளை பயன்படுத்திக்கொள்ளுங்கள். வேலை சூழல் சுமாராக இருக்கும். அதீத உற்சாகம் காரணமாக வேலையில் கவனக்குறைவு அதிகரிக்கலாம். குடும்பத்தில் கருத்து பரிமாற்றம் நல்லபடியாக இருக்கும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். நிதிநிலை திருப்திகரமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.

13-05-2021 தினப்பலன் –

துலாம்

மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்கள் வாயிலிருந்து விழும் வார்த்தைகள் காரணமாக மற்றவர்களுடன் சண்டை ஏற்படலாம். வேலை சூழல் திருப்திகரமாக இருக்காது. வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களுடன் மோதல் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைவு ஏற்படலாம். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி குறைவு நிலவும். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவுகள் அதிகரிக்கும்.

13-05-2021 தினப்பலன் –

விருச்சிகம்

மிதமான நாளாக இருக்கும். பொறுமையுடனும் புத்திசாலித்தனத்துடனும் செயல்பட வேண்டும். வேலை, தொழிலில் கடின உழைப்பை வெளிப்படுத்துவீர்கள். இதன் மூலம் சாதகமான பலனைப் பெறுவீர்கள். குடும்பத்தில் குழப்பமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு குறையலாம். பணப் புழக்கம் சாதகமாக இருக்காது. சேமிப்பது கடினமாக இருக்கும்.

13-05-2021 தினப்பலன் –

தனுசு

சாதகமான நாளாக இருக்கும். புதிய மனிதர்கள் சந்திப்பு, நட்புறவு கிடைக்கும். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். சுறுசுறுப்பாக வேலையை முடித்து பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் புரிந்துணர்வு காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். ஆடம்பர செலவுகளைத் தவிர்க்க வேண்டும்.

13-05-2021 தினப்பலன் –

மகரம்

சுமுகமான நாளாக இருக்கும். வளர்ச்சிகளைக் காண்பீர்கள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலைப் பளு அதிகமாக இருக்கும். இருப்பினும் சுறுசுறுப்பாக வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் நம்பிக்கையான சூழல் காணப்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சியான சூழல் காணப்படும். நிதி நிலை சீராக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

13-05-2021 தினப்பலன் –

கும்பம்

மற்றவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் இன்று சீரான நாளாக இருக்கும். தன்னம்பிக்கையை அதிகரித்துக்கொள்ள வேண்டும். வேலை சூழல் கடினமாக இருக்கும். வேலையில் தவறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறைவு காணப்படும். கனிவாக நடந்து கொள்வதன் மூலம் வாழ்க்கைத் துணைவரின் அன்பைப் பெறலாம். நிதி நிலை சுமாராக இருக்கும். பணப் பற்றாக்குறை அதிகரிக்கும்.

13-05-2021 தினப்பலன் –

மீனம்

வீண் குழப்பங்கள் ஏற்படும். திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் பிரச்னையைத் தவிர்க்கலாம். வேலை, தொழிலில் கடினமான சூழல் காணப்படும். வேலையில் மும்முரமாக ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். வெளியே சென்று வருவதன் மூலம் மகிழ்ச்சியை ஏற்படுத்தலாம். பணப் பற்றாக்குறை இருக்கும். கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம்.