இந்த ராசியினர்கள் இன்று சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள்… எச்சரிக்கையாக இருங்க!

 

இந்த ராசியினர்கள் இன்று  சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள்… எச்சரிக்கையாக இருங்க!

என்ன சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்வார்கள். உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும். 

25.12.2019 (புதன்கிழமை)
நல்ல நேரம்
காலை 9.15 மணி முதல் 10.15 வரை
மாலை 4.45 மணி முதல் 5.45 வரை
ராகு காலம்
பிற்பகல் 12 மணி முதல் 1.30 வரை
எமகண்டம்
காலை  7.30 மணி முதல் 9 வரை

மேஷம் 
தேவையில்லாத மன அழுத்தம் தேவையில்லை. உபரி பணம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்பட வேண்டும். நீங்கள் நேசிப்பவருக்கு பரிசுகள் கொடுக்கவும், அவரிடம் இருந்து பரிசு பெறவும் நல்ல நாள். இன்று உங்கள் எல்லோருக்கும் மிகவும் சுறுசுறுப்பான நாள். உங்கள் வாயைத் திறந்து என்ன சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்வார்கள். உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும். 
அதிர்ஷ்ட எண்: 9
ரிஷபம் 
உங்களின் கடுமையான செயல்பாடு மனைவியின் மனநிலையைப் பாதிக்கும். உங்களின் மரியாதைக் குறைவு மற்றும் சிலரை சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் போக்கால் உறவு கடுமையாக பாதிக்கப்படும். அனைத்து வாக்குறுதிகளும் நிதி பரிவர்த்தனைகளும் கவனமாக கையாளப்பட வேண்டும். 
அதிர்ஷ்ட எண்: 8
மிதுனம் 
ஆரோக்கியத்தின் மீது கவனம் தேவை திடீரென கிடைக்கும் பண வரவு உடனடி செலவுகளை சமாளிக்கும். சுவாரஸ்யமான ஒருவரை சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளன. மனமகிழ்வுக்கும் பொழுதுபோக்கிற்கும் நல்ல நாள். தொடர்புக் கொள்ளும் முறைதான் இன்றைக்கு உங்களின் முக்கியமான பலம். 
அதிர்ஷ்ட எண்: 6
கடகம்
சமீபத்திய நிகழ்வுகளால் மனம் பாதிக்கப்படும். தியானமும் யோகாவும் ஆன்மிக மற்றும் உடல்சார்ந்த ஆதாயங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். விரைவாக பணம் சம்பாதிக்கும் ஆசை இருக்கும். குடும்பத்தினர்களுடன் அமைதியான சாந்தமான நாளை அனுபவித்திடுங்கள். யாராவது பிரச்சினைகளுடன் உங்களை அணுகினால், அவர்களைப் புறக்கணித்திடுங்கள். 
அதிர்ஷ்ட எண்: 1
சிம்மம் 
விளையாட்டிலும் வெளிப்புற செயல்பாடுகளிலும் பங்கேற்பது உங்கள் சக்தியை மீட்க உதவியாக இருக்கும். நண்பர்கள் உடனிருப்பது சவுகரியத்தை ஏற்படுத்தும்.  புதிய சிந்தனை உள்ளவர்களை டீல் செய்யும்போது, இன்று நீங்கள் பெறும் கூடுதல் அறிவு உதவி செய்யும். நீங்கள் ஏற்கனவே திட்டமிட்ட ஒரு விஷயம் தடைபடும். 
அதிர்ஷ்ட எண்: 8
கன்னி 
பலன் தரக் கூடிய நாள். பயணம் செய்து செலவு செய்யும் மன நிலையில் இருப்பீர்கள். உங்கள் பெற்றோரின் ஆரோக்கியம் கவலை மற்றும் வருத்தத்தை தரும்.  இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். 
அதிர்ஷ்ட எண்: 7
துலாம் 
முடியுமானால் நீண்டதூர பயணத்தை தவிர்த்திடுங்கள். நீங்கள் பலவீனமாக இருப்பதால், பயணம் மேலும் பலவீனத்தை ஏற்படுத்தும். இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம். ஆனால் அதிகரிக்கும் செலவு, உங்களை சேமிக்க விடாமல் செய்யும். உங்களின் தாராள மனதை உங்கள் நண்பர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள இடம் தராதீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 9
விருச்சிகம் 
நோயைப் பற்றி பேசுவதை தவிர்த்திடுங்கள். நோயின் பாதிப்பில் இருந்து கவனத்தை திசைதிருப்ப ஏதாவது வேலையில் ஈடுபடுங்கள். ஏனெனில் நோயைப் பற்றி அதிகம் பேசினால், அது அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும். இன்று உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்.
அதிர்ஷ்ட எண்: 2
தனுசு 
உடல் நோயில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நீண்டகாலம் நிலுவையாக உள்ள பாக்கிகள் வசூலாகும். திருமண ஒப்பந்தம் செய்துகொள்ள நல்ல சமயம்.  உங்கள் துணையால் இன்று நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ள கூடும். எச்சரிக்கையாக இருந்து சமாளியுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 8
மகரம் 
உடலை கட்டுக்கோப்பாகவும் மனதை நன்றாகவும் வைக்க யோகாவும், தியானமும் உதவும். மதிப்பு உயரக் கூடிய பொருட்களை வாங்க சரியான நாள். நண்பர்களுடனும் புதியவர்களிடமும் எச்சரிக்கையாக இருங்கள். எந்த கூட்டு முயற்சியிலும் ஈடுபடாதீர்கள். தவறான கருத்து பரிமாற்றத்தால் இன்று தொல்லைகள் ஏற்படலாம். 
அதிர்ஷ்ட எண்: 8
கும்பம் 
பணிவான நடத்தை பாராட்டப்படும். பலர் உங்களை வாயார பாராட்டுவார்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்வில் தேவைக்கு அதிகமாக நண்பர்கள் தலையிடுவார்கள். வெளிப்புற பயணம் சவுகரியமாக இருக்காது, ஆனால் முக்கியமான தொடர்புகளுக்கு உதவும். 
அதிர்ஷ்ட எண்: 6
மீனம் 
உங்களிடம் அற்புதமான நம்பிக்கை மற்றும் புத்திசாலித்தனத்தை இயற்கை கொடுத்திருக்கிறது. அதை சிறப்பாக பயன்படுத்துங்கள். தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். சிலர் உங்களை பதற்றமடையச் செய்யலாம். அவர்களைப் புறக்கணியுங்கள். 
அதிர்ஷ்ட எண்: 3