Home ஜோதிடம் எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் எதிரிகளின் தொல்லைகள் நீங்கும்!

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் எதிரிகளின் தொல்லைகள் நீங்கும்!

நீண்ட நாட்களாக உங்கள் மனதில் இருந்த குழப்பம் ஒரு முடிவுக்கு வரும். பெண்களைப் பொறுத்தவரை வேலைப்பளுவால் சிரமப்படுவீர்கள்.

இன்றைய ராசிபலன்
09-08-2019 (ஞாயிற்றுக்கிழமை)
நல்ல நேரம்
காலை 6.15 முதல் 7.15 வரை
மாலை 3.15 முதல் 4.15 வரை
ராகு காலம்
மாலை 4.30 முதல் 6 வரை
எமகண்டம்
பிற்பகல் 12 முதல் 1.30 வரை

மேஷம்

blank

இன்றைய நாள் உற்சாகமாக இருப்பீர்கள். உங்களுக்கு எதிரான அனைத்து விமர்சனங்களும் ஒரு நொடியில் விலகிச் சென்றுவிடும். நீண்டகாலமாக இருந்த பிரச்சனையில் துணிவாக முடிவெடுப்பீர்கள். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளால் மனக் கஷ்டங்கள் வந்து நீங்கும்.

ரிஷபம்

blank

உங்களுக்கு இருந்த எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். உடன்பிறந்த சகோதரர்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். புதிய முயற்சிகளில் வெற்றிகிட்டும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வரவு ஏற்படும். பெண்கள் இன்றைய நாள் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைவீர்கள்.

மிதுனம்

blank

இன்றைய நாள் உங்களின் வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். உங்கள் உறவினர்களால் சில பிரச்சனைகளும் சங்கடங்களும் ஏற்படலாம். பேச்சில் நிதானம் தேவை. குடும்பத்தினர் மீது கூடுதல் பொறுப்பு எடுத்துக் கொள்வது நல்லது.

கடகம் 

blank

அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். எதிலும் நிதானமாக செயல்பட வேண்டும். கடன் பிரச்சினைகள் நீங்கும் யோகம் வந்து சேரும். நீண்ட நாட்களாக உங்கள் மனதில் இருந்த குழப்பம் ஒரு முடிவுக்கு வரும்.

சிம்மம்

blank

இன்றைய நாள் பணவரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சகோதரர்கள் வழியில் உதவி கேட்டு வருவார்கள். முக்கிய பணிகள் என்று நினைக்கும் செயல்களை இன்று செய்து முடித்து விடுங்கள். வீட்டில் உள்ளவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள்.

கன்னி

blank

இன்றைய நாளில் உங்கள் செயல்கள் அனைத்தும் அனுகூலமாக முடியும். பல பிரச்சனைகளால் சின்னச்சின்ன மன சங்கடங்கள் ஏற்பட்டாலும் அது உங்களுக்கு சாதகமாகவே முடியும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் சில வீடுகளில் எளிமையாக சில சுப காரியங்கள் நடக்கும் வாய்ப்பு உண்டு.

துலாம்

blank

எதிர்பார்த்த உதவிகள் தேடி வரும் உறவினர்களால் பணவரவு கிட்டும். உங்களுக்கு உங்கள் குடும்பத்தினர் மத்தியில் மரியாதை உயரும். தந்தைவழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்படலாம். நண்பர்கள் தக்க நேரத்தில் உதவுவார்கள்.

விருச்சிகம்

blank

இன்றைய நாள் உங்களுக்கு புதிய சிந்தனைகள் தோன்றலாம் பணவரவு அதிகரிக்கும் உங்கள் குடும்பத்தில் மனதுக்கு இனிய சம்பவங்கள் நடக்கலாம் . இன்றைய நாள் உற்சாகமாக காணப்படுவீர்கள். மன அமைதியும் நிம்மதியும் ஒரு சேர கிடைக்கும் நாள் இன்று.

தனுசு

blank

பொருளாதார நிலைமை மேம்படும் ஆனாலும் செலவுகள் குறையாது. உங்கள் குடும்பத்தினர் செயலால் மனம் வருந்துவீர்கள், இருப்பினும் பொறுமையை கையாளுவது நல்லது. எதிர்பாராத வகையில் உறவினர் ஒருவர் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவார்.

மகரம்

blank

பொறுப்புகள் அதிகரிக்கும் ஆனாலும் உற்சாகமாக அதை செயல்படுவீர்கள். உங்கள் முன்னோரின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். பணம் வரவு அதிகரிக்கும். தாயின் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பிள்ளைகள் தன் பேச்சை கேட்டு நடக்கவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். ஆனாலும் விட்டுக்கொடுத்து செல்வது தற்போதைய சூழ்நிலையில் நன்மையைத் தரும்.

கும்பம்

blank

இன்றைய நாள் உங்களுக்கு அனைத்தும் சாதகமாக அமையும். ஆனால் உடல்நல விஷயத்தில் மட்டும் கொஞ்சம் அக்கறை தேவை. உணவால் அஜீரணம் மற்றும் உபாதைகள் ஏற்படலாம். கணவன் மனைவிக்குள் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நொடிப்பொழுதில் நீங்கிவிடும் . பெண்களைப் பொறுத்தவரை வேலைப்பளுவால் சிரமப்படுவீர்கள்.

மீனம்

blank

முக்கிய காரியங்களை பிற்பகலுக்கு மேல் தொடங்குங்கள். ஒரு முடிவு எடுப்பதற்கு முன் அனுபவசாலிகளின் ஆலோசனை பெறுவது நல்லது. பணவரவு அதிகமாக இருந்தாலும் செலவுகளை கட்டுப்படுத்த முயற்சியுங்கள். திருமணமாகாத ஆண், பெண் யாராகினும் நல்ல இடத்தில் வரன் அமையும் வாய்ப்பு உண்டு.

மாவட்ட செய்திகள்

Most Popular

சாதிப்பாசத்தால பாமகவை திமுகவுக்குள் கொண்டு வர துடிக்கல… ஸ்டாலினிடம் உருகிய துரைமுருகன்

சாதி பாசத்தால தான் மக்காவை திமுக கூட்டணிக்குள் கொண்டு வர துரைமுருகன் ரொம்ப மெனக்கெட்டு கொண்டிருக்கிறார் என்ற பேச்சு ரொம்ப நாளாகவே இருந்து வருகிறது. திமுக சீனியர்கள் சிலரும், பாமக...

4 மீனவர்களை கொன்ற இலங்கை அரசை கண்டித்து வைகோ ஆர்ப்பாட்டம்!

இலங்கை அரசை கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். கடந்த ஜனவரி 18ஆம் தேதி, கடலில்...

சென்னை மாநகராட்சி தேர்தல் தூதராக வாஷிங்டன் சுந்தர் நியமனம்!

இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் சென்னை மாநகராட்சியின் தேர்தல் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்னும்...

அதிமுகதான் வேணும்… ராமதாஸ்: திமுகதான் வேணும்…அன்புமணி!

அதிமுக கூட்டணியில் தொடர்வதைத்தான் விரும்புகிறார் ராமதாஸ். அதே நேரம் சீட் விவகாரத்தில்தான் இடஒதுக்கீட்டு பிரச்சனையை வைத்து அழுத்திக் கொண்டிருகிறார் என்கிறது அன்புமணி வட்டாரம். ராமதாசின் எண்ணம் இப்படி இருக்க, அன்புமணியின்...
Do NOT follow this link or you will be banned from the site!