• March
    30
    Monday

Main Area

Main



கால் விரல்களில் ஜோதிட  பலன்கள்! உங்க கால் விரல் அமைப்பு எப்படியிருக்கு?

கால் விரல் அமைப்பு
கால் விரல் அமைப்பு

ஒருவரின் முக பாவங்களை வைத்தே அவர் மனதில் நினைத்துக் கொண்டிருப்பதை சொல்லி விடலாம். அதே போல், கைரேகை மூலமாக ஜோதிட சாஸ்திரத்தில் பலன்களைச் சொல்வது போல, ஒருவரின் கால் விரல்களின் அமைப்பை வைத்தும் அவரின் குணாதிசயங்களைப் பட்டியலிட்டு விடலாம். 

foot fingers

1.பெருவிரல் (அல்லது) கட்டைவிரல்

காலின் பெருவிரல் மற்ற நான்கு விரல்களை விட பெரியதாக அதாவது நீளமாக இருந்தால், அவர்கள் பெரும் படைப்பு திறமை உள்ளவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் அவர்களுடைய புத்திசாலித்தனத்தாலேயே அந்த பிரச்சனையை சமாளிக்கும் ஆற்றல் பெற்றவர்களாகவும் விளங்குவர்.

2. இரண்டாவது விரல்

காலின் இரண்டாவது அதாவது பெருவிரலுக்கு அடுத்ததாக அமைந்திருக்கும் விரல், பெருவிரலை விட பெரியதாக அமைந்திருப்பவர்கள் உயர்ந்த நிலையில் இருப்பார்கள். பெரும்பாலும் தலைவர்களாக இருப்பார்கள். பேச்சாற்றலும், முடிவெடுக்கும் திறமையும் உள்ளவர்களாக இருப்பார்கள். 

foot fingers

3. மூன்றாவது விரல்:

மூன்றாவது விரல் (நடு விரல்) அளவில் மற்ற விரல்களை விட  சிறியதாக இருந்தால், அவர்கள் எப்போதும் புன்சிரிப்புடன் வாழ்க்கையை எதிர்நோக்கும் தன்மை உடையவராக இருப்பார்கள்.மகிழ்ச்சிகரமாக வாழ்க்கையை அமைத்து கொள்வதில் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள்.

4. நான்காவது விரல்:

நான்காவது விரல் அதாவது சுண்டு விரலுக்கு முந்தைய விரல் மற்ற விரல்களை விட பெரியதாக இருந்தால் பெரும் உழைப்பாளர்களாக இருப்பார்கள். அவர்களுடைய குடும்ப நலனும் , முன்னேற்றமும் குறிப்பிட்ட நபரின் உழைப்பாலேயே அமையும் .

foot fingers

5.ஐந்தாவது விரல் அல்லது சுண்டு விரல்
அனைத்து விரல்களுமே அளவில் சிறியதாக இருந்தால் கள்ளம், கபடம் அற்ற குழந்தைத்தனமான உணர்வுகளுடன் இருப்பார்கள். உதவும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். பொருள், அதிகார விருப்பின்றி காணப்படுவார்கள்.

2018 TopTamilNews. All rights reserved.