darbar
  • January
    26
    Sunday

Main Area

Main



ஸ்டாலின் முதல்வர், சசிகலா ரிலீஸ், ஒபிஎஸ் இபிஎஸ் அவுட் – ஜோதிடர் பாலாஜி கணிப்பு!

Balaji Hasan
Balaji Hasan

லண்டனில் நடந்த கிரிக்கெட் உலககோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் துவங்கியபோதே, இங்கிலாந்து அணிதான் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணி என toptamilnewsல் என செய்தி வெளியிட்டோம். ஒரு லட்சம் பேருக்கு மேல் அதை படித்தார்கள், ஆனால், தம்புடிக்கி பிரயோசனம் இல்லை. ஆனால், நியூசிலாந்து கோப்பையை வெல்லும் என அரைகுறையாக கணித்த ஜோதிடர் பாலாஜிஹாசன் தூங்கக்கூட நேரமில்லாமல், சூரியனுக்கு கீழே நடக்கும், நடக்கவிருக்கும் எல்லாவற்றையும் கணித்துக்கொண்டே இருக்கிறார். நல்லா இருங்க ஹாசன் ஜி. சரி, இப்ப புதுசா என்ன சொல்லியிருக்காருன்னா, அரசியல் மேட்டர்.

Sasikala OPS EPS

அதாவது உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் என்பது ஒரு முக்கிய பாய்ண்ட். வழக்கமாக உள்ளாட்சி தேர்தலின்போது ஆளுங்கட்சிதானே வெற்றிபெறும், இப்போது எதிர்க்கட்சி வெற்றிபெறுவது முக்கியமான செய்திதான் என நினைத்தால் சாரி, நாம் சொல்ல வந்தது அதுவல்ல, உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என்று கணித்திருக்கிறார் அல்லவா, அதனை. சரி போகட்டும். அடுத்த தேர்தலில் ஸ்டாலின் முதல்வர், 2020 மார்ச்சுக்குள் சசிகலா விடுதலை, நேராக வந்து கட்சியை கைப்பற்றி சமாதியில் அடித்த முதல் சத்தியத்தை நிறைவேற்றுவார். அடுத்து ஒரு சிலரை கட்சியிலிருந்து வெளியேற்றுவார். ஏன் உங்க கண்ணு ஓபிஎஸ் போட்டோவை தேடுது? ரைட்டு, ரெண்டாவது சத்தியமும் நிறைவேத்தியாச்சா? அடுத்துதான் முக்கியமான பாய்ண்ட். எடப்பாடியை கட்சியில் சேர்த்துக்குவாராம்! ம்ம்ம். எனக்கு அப்பவே ஒரு சந்தேகம் இருந்துச்சி!

2018 TopTamilNews. All rights reserved.